போலந்தில் விலங்கியல் பூங்காவில் இருந்த கரடியுடன் போதை ஆசாமி ஒருவர் மல்லுக்கட்டி அதை தண்ணீரில் மூழ்கடிக்க முயன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலந்து நாட்டில் உள்ள வார்சா விலங்கியல் பூங்காவில் இருக்கும் சபீனா என்ற கரடியை 23 வயதான அந்த நபர் கோப்படுத்துவதை பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸால் பொது முடக்கம் நீக்கப்பட்ட பிறகு, இந்த ஜூ திறக்கப்பட்டது என்று அப்போது ஜூவுக்கு சென்ற நபர் இவ்வாது செய்ததாக தி டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
53 விநாடிகள் ஓடும் வீடியோவில், அந்த நபர் கரடி அடைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குள் நின்று அதை கோபப்படுத்துகிறார். அப்போது அந்த கரடி அந்த நபரை நோக்கி நகரும்போது அவர் பயந்துபோய் அந்த இடத்தில் தண்ணீர் நிரம்பிய அகழியில் குதிக்கிறார். அங்கே இருந்த பார்வையாளர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த கரடியும் அகழியில் குதித்து அந்த நபரை நோக்கி சென்றது. அந்த நபரி கரடியை பிடித்துக்கொண்டு அதை நீரில் மூழ்கடிக்க முயற்சி செய்தார்.
அந்த நபர் லேசான காயங்களுடன் கரடியிடம் இருந்து தப்பினார். பின்னர், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அந்த கரடி மிகவும் பயந்துபோய் விட்டது.
இது குறித்து ஜூ செய்தித் தொடர்பாளர் கர்க்செவ்ஸ்கா ஒரு செய்தி வலைத்தளத்திடம் கூறுகையில், “அந்த கரடி ஒரு சர்க்கஸைச் சேர்ந்தது. அது மக்கள் முன்னிலையில் இருந்தே பழகிவிட்டது. அது ஒரு மனிதனின் தாக்குதலை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்த கரடியின் கவனிப்பாளர்கள் அதைப் பார்த்துக்கொள்ளும் வரை அது பதட்டத்துடன் தண்ணீரிலேயே உட்கார்ந்திருந்தது.” என்று தெரிவித்தார்.
போதையில் இருந்த நபர் ஜூவில் கரடியை நீரில் முழ்கடிக்க முயற்சி செய்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலந்து போலீசார் அந்த நபரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"