சீறி வந்த கருநாக பாம்பை வெளுத்து வாங்கிய குடிபோதை ஆசாமி! சுருண்டு விழுந்த பாம்பு…

Man - Snake wrestling video : பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் போதை ஆசாமியிடம் சிக்கிய ஒரு பாம்பு அந்த நபரை கொத்தி, கொத்தி, கடைசியில் சோர்ந்துபோய் உயிரைவிட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

By: Updated: January 6, 2020, 05:23:59 PM

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் போதை ஆசாமியிடம் சிக்கிய ஒரு பாம்பு அந்த நபரை கொத்தி, கொத்தி, கடைசியில் சோர்ந்துபோய் உயிரைவிட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தவ்சா என்ற பகுதியில் குடிபோதையில் இருந்த ஒரு நபர் அங்கிருந்த கருநாகம் ஒன்றிடம் போதையில் வம்பு இழுத்துள்ளார். அந்த கருநாகம் சீறியபடி படமெடுத்து இருந்து நிலையிலும் அதனை அவர் விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். அந்த கருநாகம் அவரை சரமாரியாக கொத்தியும் அந்த போதை நபர் அசரவில்லை. ஒரு கட்டத்தில் அந்த பாம்பை தனது கழுத்தில் துண்டுபோல் சுற்றிக்கொண்டார்.

மீண்டும் மீண்டும் பலமுறை அந்த போதை நபரை கொத்திய பாம்பு கடைசியில் கடைசியில் உயிரை விட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் சுற்றி இருந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனையில் சேர்த்தனர். கருநாகம் பலமுறை கொத்தியும் அந்த போதை நபர் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Drunken man vs black cobra wrestling video viral horror in rajasthan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X