துபாய் புர்ஜ் கலீபா : மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி துபாயிலுள்ள பிரபல கட்டிடம் வண்ணவிளக்குகளால் காந்தியின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டது.
துபாய் புர்ஜ் கலீபா :
நேற்றைய தினம் நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள காந்தியின் நினைவு இடத்தில் பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தேசத் தந்தையாக போற்றப்படும் காந்தியின் பிறந்த நாளை மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வெகு சிறப்பாக கொண்டாடினார். இதன் ஒரு பகுதியாக துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடம் பல வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காந்தியின் உருவத்தை பிரதிபலித்தது.
உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் உயரம் மொத்தம் 2 ஆயிரத்து 722 அடியாகும். இதில் மொத்தம் 900 அப்பார்ட்மெண்ட்கள் உள்ளன. காந்தி ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
வண்ண விளக்குகளில் காந்தியின் முகம் பதித்து, 150-வது பிறந்தநாள் வாழ்த்துக்களும் கூறியிருந்தனர். கட்டிடம் முழுவதும் இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறங்களில் ஜொலித்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.