scorecardresearch

துர்கா ஸ்டாலின் காலைத் தொட்டு வணங்கிய சேகர்பாபு: கொந்தளித்த நெட்டிசன்கள்

அமைச்சர் சேகர்பாபு, துர்கா ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி வாங்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை தூண்டியுள்ளது.

Minister Sekarbabu
Sekarbabu viral video

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 70 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இந்த திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

திருமணம் செய்து கொண்ட 70 ஜோடிகளுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான 4 கிராம் தங்கம் தாலி, கட்டில், மெத்தை, மிக்சி, பீரோ, கிரைண்டர் உட்பட 36 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த திருமண விழாவில் 70 மணமக்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை காலை உணவும் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் சேகர்பாபு திடீரென துர்கா ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத துர்கா, சேகர் பாபுவின் செயலால் ஒரு நிமிடம் பதறிப்போனார்.

சபையில் கூடியிருந்தவர்களும் சேகர்பாபுவின் செயலால் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது.

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ’பொதுப்பணித்துறையும் சேர்த்து  வாங்கிக்கண்ணே’, என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் சில விமர்சனங்களை பாருங்கள்..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Durga stalin sekarbabu viral video dmk