Advertisment

மேம்பாலத்தில் இ-ரிக்ஷா ஓட்டுநர் ‘ஸ்டண்ட்’: ‘பறக்கும் சூப்பர்மேன்’ நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்: வைரல் வீடியோ

எலக்ட்ரிக் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த மரப் பலகைகளின் மீது படுத்துக்கொண்டு "சூப்பர்மேன் போல" ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
E Rickshaw Driver Stunt 1

மேம்பாலத்தில் இ-ரிக்ஷா ஓட்டுநரின் சூப்பர்மேன் ‘ஸ்டண்ட்’

இந்தியச் சாலைகளில் சிலர் துணிச்சலான மற்றும் அசாதாரணமான சாகசங்கள் செய்வதை அடிக்கடி பார்க்க முடிகிறது. சமீபத்திய வைரல் வீடியோ இதற்கு மற்றொரு சான்றாக உள்ளது. மின்சார ரிக்ஷா ஓட்டுனர் ஒருவர் பரபரப்பான மேம்பாலத்தில், சூப்பர்மேன் போல படுத்துக்கொண்டு வினோதமான முறையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய மரப் பலகைகள் ஏற்றப்பட்ட அவரது இ-ரிக்ஷா வாகனத்தில் உட்கார இடமில்லாததால் கொஞ்சம் சிரமப்பட்டு சூப்பர்மேன் போல படுத்துக்கொண்டு ஓட்டிச் செல்கிறார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: E-rickshaw driver’s ‘stunt’ on flyover goes viral; ‘flying Superman in India’, say netizens

இந்த இ-ரிக்ஷா வாகன ஓட்டுநர் மரப் பலகைகள் மேல் படுத்துக்கொண்டு சூப்பர்மேன் போல வாகனத்தை ஓட்டிச் செல்கிறார். அப்படி ஓட்டிச் செல்லும்போது அந்த இ-ரிக்ஷா ஓட்டுநர் காற்றில் மிதப்பது போல இருக்கிறது. இதை மற்றொரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பாருங்கள்: 

Advertisment
Advertisement

“இந்தியாவில் பறக்கும் சூப்பர்மேன், உண்மையான கனரக வாகன இயக்குபவர்" என்று குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று எக்ஸ் பயனர்களை ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில் சிலரை குழப்படையச் செய்துள்ளது.

ஒரு எக்ஸ் பயனர் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவிக்கையில்,  “நான் சிறுவனாக இருந்தபோது, ​​அவரைப் போல் சாலையில் என் கட்டிலை ஓட்ட வேண்டும் என்று கனவு கண்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர்,  “இந்திய சாலைகள் பழகுனருக்கானது இல்லை என்று நான் நினைக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது பயனர்,  “அவர் உண்மையான கனரக ஓட்டுநர் ஆஹா” என்று எழுதினார், மற்றொருவர்,  “இந்தப் பாடலை நினைவில் வைத்து சரியான முறையில் ஒட்டக்கூடிய வீடியோ எடிட்டரின் திறன் என்னைக் கவர்ந்தது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மனிதன் தனது வேலையை முடிக்க நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று ஏராளமானோர் சுட்டிக்காட்டினர்.  “ஒரு உண்மையான குடும்பஸ்தன் தனது குழந்தைகளுக்கு உணவு சம்பாதிப்பதற்காக வேலை செய்வதை நான் காண்கிறேன்... வேடிக்கையாக இல்லை” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment