இந்தியாவில் பிராந்திய மொழிகளில் அதிகமான மீம்ஸ்கள் தமிழ் மொழியில்தான் வெளியாகிறது. சந்தோஷம், துக்கம், கோபம் என எல்லாவற்றுக்கும் மீம்ஸ் போட பழகிவிட்ட இந்த சமூக ஊடகத் தலைமுறை, தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதற்கும் மீம்ஸ் போட்டு தங்கள் கோபத்தை மீம்ஸ் மூலம் நகைச்சுவையுடன் விமர்சனம் செய்துள்ளனர்.
தமிழக அரசு இந்த மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதனால், நடுத்தர வர்க்க மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு புலம்புவதை நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலானவர்கள் வீட்டில், டி.வி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், ஏ.சி. ஃபிரிட்ஜ், ஏர்கூலர், வாட்டர் ஹிட்டர் என மின் சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
ஒரு மாதத்துக்கு இவ்வளவுதான் செலவு என்று பட்ஜெட் வாழும் நடுத்தர வர்க்க குடும்பத் தலைவன், தலைவி, ஒரு ரூபாய் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டால், பெரும் கவலை அடைந்து புலம்பத் தொடங்கிவிடுவார்கள்.
அந்த வகையில், தமிழக அரசின் மின் கட்டண உயர்வை விமர்சித்தும் நடுத்தர வர்க்க குடும்பத் தலைவன்களின் புலம்பலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு மீம்ஸ் நகைச்சுவையுடன் வெளியாகி சமூக ஊடகங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மீம்ஸ் இதுதான், மனைவியைப் பார்த்து கணவன் கேட்பதாக, “இப்ப புரியுதா நா ஏன் சாயங்காலமே லைட்ட அணைக்கட்டுமா லைட்ட அணைக்கட்டுமானு கேட்கிறேன்னு!” என்ற மீம்ஸ் சமூக வலைதளங்களில் புலம்பலை நகைச்சுவையாக மாற்றியுள்ளது.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை விமர்சித்தும் நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனின் புலம்பலை வெளிப்படுத்தும் விதமாக வெளியாகி உள்ள மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“