எந்த வயதிலும் செய்யலாம்; ரோப் சைக்கிள் ஓட்டிய துணிச்சல் பாட்டி; வீடியோ
சைக்கிள் ஓட்டவே பயப்படுகிறவர்கள் இருக்கும் காலத்தில், எந்த வயதிலும் சாகசம் செய்யலாம் என்று ஒரு துணிச்சல் பாட்டி ரோப் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்கிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சைக்கிள் ஓட்டவே பயப்படுகிறவர்கள் இருக்கும் காலத்தில், எந்த வயதிலும் சாகசம் செய்யலாம் என்று ஒரு துணிச்சல் பாட்டி ரோப் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்கிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
யார் வேண்டுமானாலும் சாகசம் செய்யலாம். ஆனால், நீங்கள் செய்கிற சாகசம் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருக்கக்கூடாது என்பதுதான் முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும்.
ரோப் டைவ், பாராசூட் டைவ் போன்ற சாகச விளையாட்டுகளில் பலரும் ஈடுபடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு கேரளப் பாட்டி சேலை அணிந்து ரோப் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்வது என்பது பலரின் புருவங்களை உயர்த்தி வியக்க வைத்திருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் ஷை நு (@yathrikan_200) என்ற பயனர் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு வயதான மூதாட்டி சேலை அணிந்து ரோப் சைக்கிள் ஓட்டுகிறார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து, “எனக்கு பயமில்லை, நான் சைக்கிள் ஓட்டுவேன், நீங்கள் என்னுடன் வாருங்கள், அந்த அம்மா தனது 67 வயதில் எங்களிடம் வந்தார். அவருடைய ரோப் சைக்கிள் ஓட்டும் ஆசையை நாங்கள் நிறைவேற்றினோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர். “எனக்கு பயமில்லை மகனே, நான் சைக்கிள் ஓட்டுவேன். நீ மட்டும் என்னுடன் வா. 67வது வயதில் அந்த அம்மா தன் ஆசையை நிறைவேற்ற எங்களிடம் வந்தார். நாங்கள் அதை நிறைவேற்றினோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
வயதான பாட்டி ரோப் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்வதைக் காட்டும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. இதே போல, ஜூலை 2018-ல், முதியவர் ஒருவர் பைக் சாகசம் செய்யும் வீடியோ வைரலானது. ஒரு முதியவர் தனது இரு சக்கர வாகனத்தை கைப்பிடியைத் பிடிக்காமல் ஓட்டிச் சென்றார். அதில் ஓடும் பைக்கில் நிமிர்ந்து நிற்பது மட்டுமின்றி, பைக்கில் பொசிஷன் மாறும்போது சில நடன அசைவுகளையும் செய்தார்.
அந்த வகையில், இந்த துணிச்சலான கேரளப் பாட்டி சேலை அணிந்து ரோப் சைக்கிள் அசையாமல் ஓட்டிய வீடியோ நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்தி வியப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"