தன் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் நேற்று அறிவித்த அறிவிப்புதான் இன்று தேசிய ஊடகங்களில் செய்தியாகியுள்ளது.

ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்”, என அவர் தெரிவித்தார்.

மேலும், “ஆண்டவன் அருளும், மக்கள் நம்பிக்கையும் இருந்தால்தான் நாம் நினைப்பது நடக்கும். எனக்கு தேவை தொண்டர்கள் இல்லை. காவலர்கள் வேண்டும். எங்கு தப்பு நடந்தாலும் அதை கண்காணிக்கிற காவலர்கள் தேவை. அவர்களை கண்காணிக்கிற பிரஜை நான்.”, என கூறினார்.

”பணத்திற்காக பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்து மற்ற மாநிலத்தினர் சிரிக்கின்றனர். இந்த நேரத்தில் நான் எதுவும் செய்யவில்லையென்றால், நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன்”, எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவரது அரசியல் வருகை குறித்து நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகள், மீம்ஸ் சிலவற்றை காண்போம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close