வாத்து ஒன்று யானையை வம்பிழுக்க கோபமடைந்த யானை வாத்தை அலறவிட்டு தாக்கியதில் அதிர்ஷ்டவசமாக சட்னியாமல் தப்பித்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட விடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் நெட்டிசன்களை கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. அதிலும் யானை பற்றிய வீடியோக்களுக்கு எப்போதுமே நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய ஈர்ப்பு இருக்கும். அந்த வகையில், ஒரு யானைக்கும் ஒரு வாத்துக்கும் நடந்த மோதல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு நீர் நிலையில், யானை ஒன்று வந்து தண்ணீர் குடிக்கும்போது அங்கே இருந்த ஒரு வாத்து மீது லேசாக தும்பிக்கையில் தண்ணீர் அடிக்கிறது. இதனால், கோபம் அடைந்த வாத்து யானையை தன் அலகால் கொத்தி தாக்குகிறது. ஒரு கட்டத்தில் யானையின் தலை மீது ஏறி அமர்ந்துகொண்டு கொத்த ஆரம்பிக்கிறது. அதுவரை பாவம் வாத்து சிறிய பரவை என்று சாதாரணமாக கையாண்ட யானை வாத்தை கடுமையாக தாக்குகிறது. ஆனால், வாத்து ரொம்ப சாமர்த்தியமாக விலகி யானையை தாக்க முயற்சிக்கிறது. ஆனால், யானை அந்த வாத்தை கோபமாக விரட்டுகிறது. ஒரு கட்டத்தில் கால்களாலும் எட்டி உதைத்து தாக்குகிறது. யானையின் கால்களில் வாத்து சிக்கி விட்டது என்று நினைக்கும் போது அதிர்ஷ்டவசமாக வாத்து தப்பித்துவிடுகிறது. நல்ல வேலையாக சட்னி ஆகவில்லை.
இந்த வீடியோ குறித்து ஒரு வாத்து யானையின் பலத்துடன் இருந்தபோது என்று சுசந்தா நந்தா பதிவிட்டுள்ளார். யானையும் வாத்தும் சண்டைபோடும் இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"