குட்டி பிறப்பைக் கொண்டாடும் யானைக் கூட்டம்: வைரல் வீடியோ

யானை ஒன்று யானைக்கன்றை பிரசவித்ததை யானைகள் கூட்டமாக கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

elephant calf birth, elephant delivery, elephant family celebrations, elephant birth, யானை பிரசவம், யானை கன்று பிறப்பு, யானை குட்டி பிறப்பு, வைரல் வீடியோ, viral video, tamil viral news, tamil viral video news

குழந்தை பிறப்பது மனித இனத்தில் விலங்குகள் இனத்திலும் சந்தோஷமான நிகழ்வுதான். மனிதர்களைப் போலவே யானைகளும் குழந்தைகள் பிறப்பதை கொண்டாடுகின்றன. அப்படி, யானை ஒன்று, யானைக்கன்றை பிரசவித்ததை யானைகள் கூட்டமாக கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் தொடங்கும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், சமவெளிப் பகுதியில் யானை ஒன்று யானைக் குட்டியைப் பிரசவிப்பதும் அதையடுத்து யானைகள் கூட்டமாக மழையில் அந்த நிகழ்வை மகிழ்ச்சியாக கொண்டாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் இந்த வீடியோ இன்று தனக்கு வாட்சப் வழியாக வந்ததாக பகிர்ந்துள்ளார். வீடியோவில், யானை ஒன்று குட்டியைப் பிரசவிக்கிறது. தரையை முத்தமிட்ட யானைக் குட்டியை தாய் யானை எழுப்பி மகிழ்ச்சி தெரிவிக்கிறது. அப்போது, அருகே இருந்த மற்ற யானைகள் கூட்டமாக வந்து யானைக் குட்டி பிறந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். அந்த நேரம் பார்த்து லேசான தூரல் மழை பெய்கிறது. நிச்சயமாக இந்த புத்தாண்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தக் கூடிய வீடியோவாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ். அதிகாரி பிரவீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “புதிய யானைக் குட்டி பிறப்பைக் கொண்டாட யானைகள் குடும்பம் முடிவு செய்யும் விதம். இன்று பார்ப்பதற்கு சிறப்பான ஒரு விஷயமாக உள்ளது. இந்த வீடியோ வாட்சப் வழியாக வந்தது.

யானைக் குட்டி பிறப்பதை கொண்டாடும் முறை யானை குடும்பத்தை சிறப்பிக்கிறது. யானைகளின் சமூக அமைப்பும் தெரிகிறது.

யானைகள் குடும்பமாக வாழ்கிறது. நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. யானைகள் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். இறந்தாலும் துக்கப்படுத்துகின்றன.யானைகள் உறவினர்களை அங்கீகரிக்கின்றன. யானைகள் குடும்பத்திலும் புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்கின்றன.

மற்ற யானைகள் சாலைகள் மற்றும் பொருள்களை நினைவில் வைத்துக்கொள்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக இந்த வீடியோவைப் பார்க்கும்போது யானைகளும் சமூகமாக பிறப்பை கொண்டாடுகின்றன என்பது தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Elephant calf birth celebration elephants family viral video

Next Story
ஓனர் பெண்ணுடன் ஜோடி போட்டு டான்ஸ் ஆடும் எருமை மாடு: வைரல் வீடியோtrending viral videos trending viral video of a buffalo dancing with its owner girl has internet viral ஓனர் பெண்ணுடன் ஜோடி போட்டு டான்ஸ் ஆடும் எருமை மாடு: வைரல் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com