New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/30/4k66l6XDFgptig0tx6F6.jpg)
ஒரு குட்டி யானையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சுட்டியான குட்டி யானை பேரழகு, குட்டி யானையை பார்க்கும்போதே மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். அப்படியான ஒரு குட்டி யானையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு குட்டி யானையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கு என்றால் அது யானைதான். யானை என்றாலே பிரம்மாண்டம். சுட்டியான குட்டி யானை பேரழகு, குட்டி யானையை பார்க்கும்போதே மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். அப்படியான ஒரு குட்டி யானையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காட்டில் முன்னங்கால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட குட்டி யானை, வனத்துறையினரின் முயற்சி மற்றும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் குணமாகி வேகமாக துள்ளி ஓடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஒரு யானைக் குட்டி அழகாக ட்துள்ளி ஓடுகிறது. மற்றொரு வீடியோவில் கால் பாதிக்கப்பட்ட குட்டி யானை வலியுடன் நடக்கிறது. மற்றொரு வீடியோ கிளிப்பில் தெர்மல் கேமிராவில் யானை ஒன்றை கண்டுபிடிக்கின்றனர்.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “சோட்டு எல்லா வலியையும் தாண்டி எழுந்து ஓடுகிறது...
வெப்ப ட்ரோன் மூலம் அதை மீட்டபோது, அதன் வலது முன்கை மிக மோசமான நிலையில் இருந்தது. அதைக் காப்பாற்ற, துண்டிக்க வேண்டும் என்பதுதான் யோசனையாக இருந்தது. பின்னர் அற்புதங்கள் நடந்தன. கால்நடை மருத்துவர்கள் முயற்சித்தனர்...
அது எப்படி வேகமாக ஓடுகிறது என்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.” என்று நெகிழ்சியான ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பாருங்கள்:
https://twitter.com/susantananda3/status/1906192203027980395
இந்த வைரல் வீடியோ குறித்து ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “ஐயா, ஒரு மூத்த அதிகாரியாக நீங்கள் சொல்வது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது, யானைக்குட்டியை அவன் அல்லது அவள் என்று குறிப்பிடுவதைப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது பொதுவாக அவற்றை வேறு யாரையும் விட அவை இல்லை என்பதை நீங்கள் அதிகம் புரிந்து கொள்ளும் விஷயங்கள் அல்லது பொருட்களாகக் குறைக்கிறது. இது ஒரு வேண்டுகோள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “வாவ், என்ன நடந்ததுன்னு சொல்லுங்க. கடவுள் சோட்டுவை ஆசிர்வதிப்பாராக.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பயனர், “ரொம்ப நல்லா இருக்கு... அவன் ஒரு குழந்தை.. நீ அவனை மறுபடியும் பயமுறுத்த முயற்சி பண்ணணும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.