New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/15/DOugW9BuRiUljNAyhkZP.jpg)
ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் யானைகளின் நடத்தை முறையை விளக்கி, யானைகளை “மிகவும் புத்திசாலி மற்றும் சமூக விலங்குகள்” என்று அழைத்தார். (Image source: @ParveenKaswan/X)
ஒரு சுற்றுலா இடத்தில், ஒரு இளைனர் வேகமாக ஓடுவதையும், பின்னால் ஒரு யானை துரத்துவதையும் காட்டும் வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் யானைகளின் நடத்தை முறையை விளக்கி, யானைகளை “மிகவும் புத்திசாலி மற்றும் சமூக விலங்குகள்” என்று அழைத்தார். (Image source: @ParveenKaswan/X)
ஒரு இளைஞர் யானையை கேலி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகப் பயனர்கள் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, அந்த விலங்குக்கும் அந்த மனிதனுக்கும் இடையிலான பயங்கரமான மோதலைக் காட்டுகிறது.
இந்த வைரல் காணொளியில், காட்டின் நடுவில் சுற்றுலாத் தலம் போன்ற இடத்தில் ஒரு இளைஞர் ஓடுவதையும், ஒரு யானை அவரைத் துரத்துவதையும் காட்டுகிறது. இந்த வீடியோவில் சில நொடிகளிலேயே, அந்த நபர் யானையை தொடர்ந்து கேலி செய்து, கோபமூட்டி யானையைத் தாக்கத் தூண்டுவதையும் பார்க்க முடிகிறது. அந்த நபர் சிறிது நேரம் ஓடி, நின்று, மீண்டும் யானையைத் துரத்துகிறார். தொடர்ச்சியான கேலி காரணமாக யானையின் கோபத்தைத் தூண்டுவது வீடியோவில் தெளிவாகக் காணலாம். இருப்பினும், அது தனது கூட்டத்துடன் திரும்பி ஓடும் வரை அந்த நபர் அதை கேலி செய்து கொண்டே இருக்கிறார்.
“இந்த வீடியோவில் உள்ள விலங்கை அடையாளம் காணுங்கள். ஒருவேளை நீங்கள் இளமையாக இருக்கலாம், யானைகளை விட நீங்கள் வேகமாக ஓடலாம். ஆனால், இந்த எரிச்சலூட்டும் விலங்குகள் அடுத்த சில நாட்களுக்கு மற்ற மனிதர்களைப் பார்த்தால் அமைதியாக நடந்து கொள்ளாது. உங்கள் வேடிக்கைக்காக காட்டு விலங்குகளை எரிச்சலூட்டாதீர்கள்” என்று பர்வீன் கஸ்வான் எழுதினார்.
இந்த வீடியோவைப் பாருங்கள்:
Identify the animal in this video.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 12, 2025
Maybe you are young and you can outrun the elephants. But these irritated animals don’t behave peacefully if they see other human for next few days. Don’t irritate wild animals for your fun. pic.twitter.com/chYlLeqx3d
மற்றொரு பதிவில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் யானைகளின் நடத்தை முறையை விளக்கி, அவற்றை "மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் சமூக விலங்குகள்" என்று அழைத்தார். மனிதர்களால் துன்புறுத்தப்படுவது விலங்குகளில் நடத்தை மாற்றங்களைத் தூண்டி, அவற்றை ஆக்ரோஷமானவர்களாக மாற்றும் மற்றும் நீண்டகால மனித-யானை மோதலை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இந்த வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது, இது அந்த நபருக்கு எதிராக பெரும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. ஒரு எக்ஸ் பயனர் எழுதினார், “இந்தப் பையனை மிருகக்காட்சிசாலையில் 6 மாதங்களுக்கு விலங்குகளின் மலத்தை எடுக்கும் வேலைக்கு அனுப்புவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், “தயவுசெய்து அவனைக் கண்டுபிடித்து கைது செய்யுங்கள் சார்” என்று கருத்து தெரிவித்தார்.
“இதைப் பார்த்தது எனக்கு மிகுந்த பதட்டத்தையே ஏற்படுத்தியது; யானையின் பொறுமைக்கு வணக்கம்” என்று மூன்றாவது பயனர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.