மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டுயானைகள், கரடி, சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இதில் மேட்டுப்பாளையம் சிறுமுகை காரமடை வனப்பகுதியில் புதற்காடுகளின் வளர்ச்சி குறையாமல் இருப்பதாலும், தென்னிந்திய யானைகளின் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ற சூழல் உள்ளதாலும் டிசம்பர் முதல் ஜூன் மாதம் வரை இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் நேற்று மாலை முள்ளியிலிருந்து கெத்தை செல்லும் சாலையில் சுற்றுலா வாகனத்தை வழி மறித்து காட்டு யானை துரத்தியது. இதை வெளியில் சென்ற சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுற்றுலா பயணிகள் யானை துரத்துவதை பார்த்தவுடன் பயத்தில் வாகனத்தை பின்னோக்கி செலுத்தி உயிர் தப்பித்தனர் சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முள்ளியிலிருந்து கெத்தை செல்லும் சாலையில் சுற்றுலா வாகனத்தை வழி மறித்து காட்டு யானை துரத்தியது. இதை வெளியில் சென்ற சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil