Viral video: நகரங்களில் இருந்து தீபாவளிக்கு எல்லோரும் பேருந்துகளில் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருக்கையில், யானை ஒன்று பேருந்தை நிறுத்தி பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளது. அதற்கும் தீபாவளிக்கு ஊருக்குப் போக அவசரமோ என்னவோ?
பெருநகரங்களில் தங்கி வேலை செய்பவர்கள், வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட பேருந்துகளிலும் ரயில்களிலும் அவசர அவசரமாக செல்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. தீபாவளி பண்டிகை நேரத்தில், யானை ஒன்று பேருந்தை மறித்து ஏற முயன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐ.பி.எஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீசியோவி 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
வன விலங்குகள் வீடியோ என்றாலே சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் கண்டபடி வைரலாகி விடும். அதிலும், யானைகள் வீடியோ என்றால் மின்னல் வேகத்தில் வைரலாகி விடும். அதே போன்ற ஒரு யானை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
யானை ஒன்று பேருந்தை மறித்து உள்ளே ஏற முயன்ற வீடியோவை ஐ.பி.எஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 14 வினாடிகள் நேரம் கொண்ட வீடியோவில் யானை ஒன்று பேருந்து நோக்கி நடந்து செல்கிற்து. யானையைக் கடக்க ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைக்கிறார். ஆனால், யானைக்கு வேறு திட்டம் இருந்தது போல, அந்த யானை பேருந்தில் ஏற முயற்சி செய்வது போல, அதன் தும்பிக்கையை பேருந்தின் உள்ளே விடுகிறது. சுதாரித்துக்கொண்ட பேருந்து ஓட்டுநர் நைசாக யானையிடம் இருந்து பேருந்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்.
எல்லோரு தீபாவளிக்கு அவசரமாக சொந்த ஊருக்கு செல்கிறார்கள். என்றால், யானையும் தீபாவளிக்கு அவசரமாக சொந்த ஊருக்கு செல்கிறதோ என்று இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் லைக், கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"