வேலியை தாண்டி வருவாயா? சேட்டைக்கார யானையின் வைரல் வீடியோ

. விழுந்துவிடுமோ என்ற பயம் நமக்கு இருந்தாலும் குட்டிக் குழந்தை தத்தி தத்தி நடை பழகுவது போன்று பின்னிரண்டு கால்களை அந்த வேலியில் வைத்து தன்னை பேலன்ஸ் செய்து கீழே இறங்கி செல்கிறது அந்த ஆண் யானை.

Viral video, elephant, Nilgiris

Elephant climbs iron fence : யானைகள் எப்போதும் அறிவாளிகள் தான். மேலும் சூழலை உடனே கிரகித்துக் கொண்டு அதன்படி செயலும் விலங்குகளாக யானைகள் உள்ளன. அதனால் தான் யானைகள் மனிதர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளுக்குள் நுழைய கூடாது என எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் உடனுக்குடன் தோற்கடித்துவிடுகின்றன.

சமீபத்தில் நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சுப்ரியா சாஹூ யானைகளின் அறிவை எடுத்துக் காட்டும் சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


வனவிலங்குகள் வரக்கூடாது என்று தடுப்பு வேலி ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த தடுப்பு வேலியில் முதலில் ஏறி தன்னுடைய கனத்தை தாங்குமா என்று முதலில் யானை சோதிக்கிறது. பிறகு முன்னிரண்டு கால்களை வேலிக்கு அந்தப்பக்கம் வைத்து தன்னுடைய முழு எடையையும் முன்னே கொண்டு சென்றது யானை. விழுந்துவிடுமோ என்ற பயம் நமக்கு இருந்தாலும் குட்டிக் குழந்தை தத்தி தத்தி நடை பழகுவது போன்று பின்னிரண்டு கால்களை அந்த வேலியில் வைத்து தன்னை பேலன்ஸ் செய்து கீழே இறங்கி செல்கிறது அந்த ஆண் யானை. இந்த வீடியோவை கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 3 ஆயிரம் ஷேர் செய்துள்ளனர். 17 ஆயிரம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக பலர் கூறினாலும், மைசூர் அருகே உள்ள நாகர்ஹோலே பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை புலிகள் காப்பக இயக்குநர் உறுதி செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றுள்ளது. விவசாய பயிர்களை தின்றுவிட்டு மீண்டும் காட்டுக்குள் வந்த போது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது என்று குமார் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Elephant climbs iron fence video leaves netizens stunned

Next Story
உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணி… பேஸ்புக்கில் ராஜினாமா கடிதத்துடன் பதவி விலகிய டாக்டர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com