கோவை ஆலந்துறை அடுத்த இருட்டு பள்ளம் பகுதியில் விவசாய தோட்டங்களில் பணி புரியும் கூலித் தொழிலாளர்கள் அங்கு தங்கி வசிக்கின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள ஒரு தோட்டத்துக்குச் செல்லும் இரும்புக் கதவை திறந்து ஊருக்குள் ஒற்றை காட்டு யானை வர முயன்றது. வாகனத்தின் சத்தத்தைக் கேட்டு திரும்பிச் சென்று மீண்டும் அங்கு வந்தது.
உணவு தண்ணீர் தேடி இரவு நேரங்களில் காட்டு யானைகள் அலைவதால் அப்பகுதிகளில் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஆலாந்துறை, இருட்டுப் பள்ளம் துணைத் தலைவர் ராஜேந்திரன் பிரகாஷ் மற்றும் வேலுச்சாமி என்பவர்கள் தோட்டங்களில் உள்ள ஓட்டு வீடுகளில் உணவு தேடி சென்று உள்ளது ஒற்றைக் காட்டு யானை.
மேலும் அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழைத், தென்னை பாக்கு போன்ற பயிர்களை சேதத்தை ஏற்படுத்தி சென்று உள்ளது. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் அங்கு வனத்துறை செல்வதற்கு முன் காட்டுப் பகுதிக்குள் சென்றது அந்த ஒற்றைக் காட்டு யானை.
வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து மனித - விலங்கு மோதலை தடுத்தும் பயிர்களை பாதுகாத்து வரும் சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள யானைகள் அவ்வப் போது ஊர்களுக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனை தடுக்க அரசு மற்றும் வனத் துறையினர் நிரந்தர தீர்வு கண்டால் மட்டுமே அப்பகுதி மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் மற்றும் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“