தோப்புக்குள் நுழைந்த காட்டு யானை அங்கே குழாயில் பீச்சி அடிக்கும் தண்ணீரை அப்படியே துப்பிக்கையை வைத்து குழாயில் இருந்த்கு நேரடியாக தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் தகவல் தொடர்புகளாலும் தொழில் நுட்பங்களாலும் ஆளப்படுகிறது. இது காட்சி ஊடகங்களின் காலமாக உள்ளது. பலரும் தங்கள் மொபைலில் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டு மூழ்கிக் கிடக்கிறார்கள். இந்த சமூக ஊடகங்களின் காலத்தில் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பெரும்பாலும் வனவிலங்குகள் பற்றிய வீடியோக்கள்தான். குறிப்பாக யானைகள் வீடியோக்கள் என்றாலே அவை வைரலாகத் தவறியதே இல்லை. ஏனென்றால், யானைகளைப் பார்த்ததும் மனிதர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
இந்தியாவின் வனத்துறை அதிகாரிகளான ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் வனவிலங்குகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காடுகளில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன. அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்துள்ள யானை குழாயில் நேரடியாக தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ குறித்து சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “குழாயிலிருந்து நேராக தண்ணீர் குடிக்கிறது…
இந்த யானை பரத்பூர் காட்டில் வசிக்கிறது, புவனேஸ்வர் நகரம் அதைச் சுற்றிலும் பரந்து விரிந்து கிடக்கிறது, இந்த யானை கொஞ்சம் கொஞ்சமாக நகரமயமாகிவிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த யானை பீச்சி அடிக்கும் குழாயில் இருந்து நேரடியாக தண்ணீர் குடிப்பதைப் பார்த்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“