கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு உள்ளது. ஒற்றை காட்டு யானை, இரண்டு மற்றும் கூட்டத்துடன் அப்பகுதியில் புகுந்து உயிருக்கும், உடைமைகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நாள்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சேதத்தை ஏற்படுத்தி வரும் இரண்டு காட்டு யானைகள், வாகனத்தில் சென்ற நபரை துரத்தியது, கூச்சலிட்ட அருகில் இருந்த வீட்டில் இருந்தவர்களை தாக்க முயன்றது. வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது, நடைப் பயிற்சிக்கு சென்ற கணவன் - மனைவியை துரத்தி தாக்க முயன்றது, அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் மாடுகளுக்கு வைத்து இருந்த தீவனங்களை தின்றது அங்கு இருந்த பயிர்களை சேதத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூரில் உள்ள பெருமாள் கோவில் இருந்த 55 வயது பூசாரி பாஸ்கரன் என்பவரை தாக்கியது.
இதில் அவருக்கு இரண்டு கால்கள் காயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினரின் ஆல்பா குழு அங்கு விரைந்தது. மேலும் அப்பகுதி ஊர் பொது மக்களுக்கு இந்த தகவல் பரவியதால் அங்கு குவிந்தனர். ஊர் மக்கள் ஒன்று கூடி வனத் துறையினருடன் வனப் பகுதிக்கு யானையை விரட்டும் பரபரப்பான சூழ்நிலையில், அப்பொழுது அங்கு இருந்த பெண் ஒருவர் "போ சாமி போ, பிள்ளையாரப்பா போ" என யானையிடம் கூறுகிறார்.
அப்பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளால் உயிர் சேதம் ஏற்படும் முன்பு வனத் துறையினர் நிரந்தரமாக வனப் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“