நிலத்தில் வாழும் பெரிய விலங்கு என்றால் அது யானைதான். யானைகள் இல்லையென்றால் காடுகள் இல்லை, காடுகளைப் பாதுகாக்கும் விலங்கு யானைகள். காடுகளை அழித்து, யானை வழித்தடங்களில் கட்டிடங்கள் எழுப்பி, சாலைகள் அமைத்து ஆக்கிரமித்துக்கொண்டு, மனிதர்கள் மற்றும் யானைகள் இடையே மோதல் நிகழும்போது, நாம் யானைகள் அட்டகாசம் செய்வதாக யானைகளைக் குற்றம் சாட்டுகிறோம்.
மனிதர்களின் அத்தியாவசியம் கருதி காடுகள் வழியே சாலை அமைக்கிறோம் என்றால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்து அமையும், யானைகளும் மனிதர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தாதபோது அவற்றி போக்கில் செல்கின்றன.
ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் காடுகள் குறித்தும் வனவிலங்குகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்களுக்கு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் விழிப்புணர்வு பதிலும் கிடைத்துள்ளது.
அந்த வகையில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், பெரிய யானைகள் தங்கள் குழுவில் உள்ள குட்டி யானைகளைப் பாதுகாப்பாக சாலையைத் தாண்டி அழைத்துச் செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
Nobody should leave behind. An elephant family helping the kiddo in crossing the road.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 17, 2024
Elephants are called as long ranging animals, they travel far and wide. Together. pic.twitter.com/8A8BjDip7S
அந்த வீடியோவில், மலைப்பாங்கான காட்டு வழியே செல்லும் சாலையில், பெரிய யானைகள் தங்கள் குழுவில் உள்ள குட்டி யானைகளைப் பாதுகாப்பாக சாலையைத் தாண்டி அழைத்துச் செல்கின்றன. அதுவரை சாலையில் இரண்டு முனைகளிலும் கார்கள் நின்று யானைகள் செல்வதற்கு உதவுகின்றன.
இந்த வீடியோ குறித்து பவீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “யாரையும் விட்டுவிடக்கூடாது என்று ஒரு யானைக் குடும்பம் குட்டிகளுக்கு சாலையைக் கடக்க உதவுகிறது.
யானைகள் நீண்ட தூரம் பயணிக்கும் விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன, அவை ஒன்றாக சேர்ந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், இந்த வீடியோ இந்தியாவில் பதிவு செய்யப்பட்டது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
யானைகள் சமூகமாக வாழும் விலங்குகள், பாதுகாப்பு உணர்வுடன் குடும்பமாக வாழக்கூடிய விலங்கு யானைகள். தங்கள் குட்டிகளை பாதுகாப்பாக சாலையைத் தாண்டி அழைத்துச் செல்லும் யானைகளைப் பாருங்கள், பார்க்கும்போதே உங்களுக்குள் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.