scorecardresearch

வால்பாறை வெள்ளம்: 8 மணி நேரத்திற்கு பிறகு போராடி மீண்ட யானை

கேரளா மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்னர்

elephant
யானைகள் வழித்தடம்

ரகுமான் கோவை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கேரளா மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாக கட்சியளிக்கும் நிலையில், நீர்நிலைகள் நிரம்பி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்னர் மழை மேலும் அதிகரிக்கும் என்பதால் கேரளா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

இதனிடையே கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் பில்லப்பாரா என்ற இடத்தில் உள்ள ஆற்றில் இன்று காலை கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்த வெள்ளப்பெருக்கில் யானை சிக்கிக்கொண்டனது. இதை பார்த்த மக்கள் யானையை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் சுமார் எட்டு மணி நேரம் மேலாக போராடிடிய யானை இறுதியாக நீரில் இருந்து மீண்டு தானாகவே வானத்திற்குள் சென்றது. இது தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Elephant got in the flood recovered after 8 hours viral video