கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொலை: அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொடுத்தனர்

Pregnant elephant dead : கேரளா மாநிலத்தில், அன்னாசிபழத்தற்குள்  பட்டாசுகளை  மறைத்து வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற சம்பவம் மக்களிடையே கடும் அதிரிச்சியை ஏற்படுத்தியது

By: Updated: June 3, 2020, 01:31:26 PM

கேரளா மாநிலத்தில், அன்னாசிபழத்தற்குள்  பட்டாசுகளை  மறைத்து வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற சம்பவம் மக்களிடையே கடும் அதிரிச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே ஆற்றை ஒட்டிய குடியிருப்புப்பகுதிக்கு வந்த கர்ப்பிணி யானையை, அப்பகுதி மக்கள், பட்டாசுகள் நிரப்பிய பைன் ஆப்பிள் பழத்தை சாப்பிட அளித்தனர்.

மனிதர்களின் குரூர புத்தியை அறியாத யானை, அந்த பழத்தை ருசித்தது. பின் பழத்திற்குள் இருந்த பட்டாசுகள் வெடித்ததில், யானையின் வாய் கிழிந்து, அந்த ஆற்றிலேயே நின்றவாறு மரணமடைந்தது.

இந்த நிகழ்வு மலப்புரம் வனச்சரகர் மோகன கிருஷ்ணனுக்கு தெரியவந்ததையடுத்து, அவர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வு தொடர்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, யானை கர்ப்பமாக இருந்ததாகவும், இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் இருந்தது.

சக்திவாய்ந்த பட்டாசுகள், பழத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால், யானையின் வாய், நாக்கு உள்ளிட்ட பாகங்கள் பலத்த சேதமடைந்தன. யானை அந்த வலியோடவே மற்ற பகுதிகளுக்கு சென்று வந்துள்ளது. நாக்கு, வாயில் ஏற்பட்ட காயங்களால் அதனால் எதையும் சாப்பிட முடியவில்லை.
மக்கள் யாருக்கும் அந்த யானையால் இதுவரை எந்த தீங்கும் நிகழாத நிலையில், அது அந்த கிராமத்தையே சுற்றி சுற்றி வந்துள்ளது. அந்த யானை, மிகுந்த சாது என்று அரவ் குறிப்பிட்டுள்ளார்.

 


இறுதியில் அந்த யானை வெள்ளியார் ஆற்றில் இறங்கி நின்றது, அதன் வாய், நாக்கு பகுதியில் தண்ணீர் படுமாறு செய்தது, அதனால் வலியை தாங்க இயலாமல், கடுமையாக பாதிக்கப்பட்டது.

;நாங்கள், சுரேந்திரன், நீலகந்தன் என்ற இரு கும்கி யானைகளை அழைத்துசென்று அந்த யானையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டோம். ஆனால், அதற்கு நாம் இறந்துவிடுவோம் என்று தெரிந்திருக்கும்போல, எங்களின் நடவடிக்கைக்கு எவ்வித இசைவும் அது தெரிவிக்கவில்லை.
எங்களின் பலமணிநேர முயற்சிக்கு பிறகு, அந்த யானையை மீட்டோம். 27ம் தேதி மாலை 4 மணிக்கு யானை, தண்ணீரில் நின்றவாறே இறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசு வெடித்ததில் அதன் முகம் கடுமையாக சேதமடைந்திருந்தது. பின் யானைக்கு போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டு அது நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவர் பேஸ்புக் பதில் உணர்ச்சிகரமாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Elephant kerala crackers crackers laden fruit malappuram injured pregnant elephant

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X