New Update
/indian-express-tamil/media/media_files/eAr6tcRkerH1VTP7R1W5.jpg)
குட்டிகளைக் காப்பாற்றப் போராடும் தாய் யானை: வைரல் வீடியோ
காட்டில் ஒரு தாய் யானை இரண்டு குட்டிகளுடன் சென்று கொண்டிருக்கையில், சிங்கங்கள் கூட்டமாக சுற்றி வளைத்து வேட்டையாட முயற்சிக்கும்போது, தாய் யானை குட்டிகளைக் காப்பாற்ற போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.
குட்டிகளைக் காப்பாற்றப் போராடும் தாய் யானை: வைரல் வீடியோ
காட்டில் ஒரு தாய் யானை இரண்டு குட்டிகளுடன் சென்று கொண்டிருக்கையில், சிங்கங்கள் கூட்டமாக சுற்றி வளைத்து வேட்டையாட முயற்சிக்கும்போது, தாய் யானை குட்டிகளைக் காப்பாற்ற போராடிய கண்ணீரை வரவழைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் பெரும்பாலும் வன விலங்குகள் வீடியோக்கள் ஆகும். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ 3.41 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
வீடியோவில் பதிவாகியுள்ள இந்த சம்பவம் ஆஃப்ரிக்காவில் உள்ள சோபே தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோவில், சுற்றி வளைத்த சிங்கக் கூட்டங்களுக்கு எதிராக தனது இரண்டு குட்டிகளை காப்பாற்ற தாய் யானை போராடும் காட்சி பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.
20 சிங்கங்கள் சுற்றிவளைத்து நிற்க, தனது இரண்டு குட்டிகளையும் காப்பாற்ற தன்னந்தனியாக போராடுகிறது தாய் யானை. ஆனால் சிங்கங்களும் விட்டுக்கொடுக்காமல், எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என காத்துக் கொண்டிருக்கிறது. டெஸ்மண்ட் க்ளாக் என்ற வாழிகாட்டி அதிகாலை வேளையில் இந்த காட்சியை பதிவு செய்துள்ளார்.
வரப்போகிற ஆபத்தை அறியாமல் தனது குட்டியை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள குளத்திற்கு தண்ணீர் அருந்த போகும் போதுதான், சுற்றிலும் சிங்கம் நிற்பதை பார்க்கிறது தாய் யானை. ஆபத்தில் மாட்டிக் கொண்டோம் என்பது யானைக்கு புரியத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக சிங்கக் கூட்டம் நெருங்க, தனது குட்டியை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது தாய் யானை. ஒரு கட்டத்தில் சிங்கத்தின் கை ஓங்குகிறது. இந்தப் போராட்டத்திற்கு நடுவே ஒரு யானை குட்டி வசமாக சிங்கத்திடம் சிக்கிவிடுகிறது.
தாய் யானைக்கோ என்ன செய்வதென தெரியவில்லை. சிங்கத்திடம் இருந்து குட்டியை மீட்கவா அல்லது இன்னொரு குட்டிக்கு காவலாக நிற்கவா என அல்லாடுகிறது தாய் யானை. பார்க்கும் நமகே நெஞ்செல்லாம் பதறுகிறது. சரி, முதலில் சிங்கத்திடம் சிக்கிய குட்டியை காப்பாற்றலாம் என யோசித்து சிங்கத்தை தாக்க, அந்த சமயத்தில் இன்னொரு குட்டி எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக நின்றது.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியாக நின்ற யானைக் குட்டியை தாக்குகிறது சிங்கம். இதில் சோகம் என்னவென்றால், தாய் யானையால் எவ்வளவு முயற்சித்தும் முதல் குட்டியை சிங்கத்திடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை.
இருப்பினும், சிங்கங்கள் கூட்டமாக சுற்றி வளைத்தாலும் தாய் யானை தனது குட்டிகளைக் காப்பாற்ற தைரியமாகப் போராடியதை அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.