காடுகள் மனிதர்கள் காணாத பல அதிசயங்களை வைத்திருக்கிறது. அவற்றை மனிதர்கள் பார்க்கும்போது இயற்கையின் அதிசயத்தில் திகைத்துப் போகிறார்கள்.
யானை ஒன்று இயற்கையாக பெடிகியூர் செய்து கொள்ளும் வீடியோவும், அரிதாக காணப்படும் மலபார் ராட்சத அணில் ஒன்று மரங்களில் தாவித் திரியும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
நிலத்தில் வாழும் விலங்கினங்களில் மிகப்பெரிய விலங்கு மட்டுமல்ல மிகவும் நுண்ணறிவு மிக்கதும் யானைதான். யானைகளைப் பார்க்கும்போதே மனதுகுள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
மனிதர்கள் தங்கள் பாதங்களை பெடிகியூர் என்று சுத்தம் செய்துகொள்வதைப் போல யானைகளும் தங்கள் பாதங்களை இயற்கையான முறையில் சுத்தம் செய்து கொள்ளும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்த நந்தா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Natural pedicure by a tusker… pic.twitter.com/TNQM4hUXL0
— Susanta Nanda (@susantananda3) September 19, 2024
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்த நந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், காட்டில் யானை ஒன்று, ஒரு காய்ந்த கொம்பு மீது பாதத்தை தேய்த்து பெடிகியூர் செய்து சுத்தம் செய்து கொள்கிறது. உண்மையில் யானையின் இந்த செயல் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வீடியோ குறித்து, “இந்த யானை இயற்கையாக பெடிகியூர் செய்துகொள்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யானை அதுவாகவே பெடிகியூர் செய்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ஒரு மலபார் அணில் மரங்களில் தாவித் திரியும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவும் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Its a treat to watch this spectacular Malabar Giant Squirrel (Ratufa indica) leaping between trees with incredible agility. This arboreal giant primarily inhabits the lush tropical forests of the Western Ghats and parts of the Eastern Ghats, thriving in dense canopies. These… pic.twitter.com/INhXwub9bm
— Supriya Sahu IAS (@supriyasahuias) September 19, 2024
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு குறிப்பிடுகையில், “இந்த அற்புதமான மலபார் ராட்சத அணில் (ரதுஃபா இண்டிகா) நம்பமுடியாத சுறுசுறுப்புடன் மரங்களுக்கு இடையே குதிப்பதைப் பார்ப்பது ஒரு விருந்தாகும். இந்த ஆர்போரியல் ராட்சத அணில் முதன்மையாக மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையான வெப்பமண்டல காடுகளிலும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளிலும் அடர்ந்த விதானங்களில் செழித்து வளர்கிறது. இந்த அணில்கள் மிகவும் தனிமையாகவும் கூட்டமகாவும் உள்ளன, அதிக நேரம் மரங்களில் நேரம் செலவிடுகின்றன, அங்கு அவை பெரிய கூடுகளை உருவாக்குகின்றன. ஆழமான மெரூன்கள் முதல் பிரவுன்கள், கருப்புகள் மற்றும் கிரீம்கள் வரையிலான பல வண்ண பூச்சுகளுடன், மலபார் ராட்சத அணில் பார்வைக்கு தனித்து நிற்கிறது, இருப்பினும் அவற்றின் துடிப்பான சாயல்கள் காட்டின் நிழல் விதானத்தில் கலக்க உதவுகின்றன. பூர்வீக பெரிய மரங்கள் மற்றும் காடுகளின் உயிர்வாழ்வை உறுதி செய்ய நாம் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.