பார்க்க அத்தனை மகிழ்ச்சி! குழந்தை போல் விளையாடும் யானை

யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்று மட்டுமல்ல, அவை நம்பமுடியாத விளையாட்டுத் தன்மை கொண்டது.

By: Updated: February 22, 2020, 01:36:10 PM

தண்ணீர் தெளிப்பானில் யானை விளையாடும் வீடியோ ஒன்று  இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி சுசாந்தா நந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை  பகிர்ந்துள்ளார்.

“யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்று மட்டுமல்ல, அவை நம்பமுடியாத விளையாட்டுத் தன்மை கொண்டது . மீட்கப்பட்ட இந்த யானை, நீர் தெளிப்பானை உடைத்த பிறகு, தனக்கான மகிழ்ச்சியை அடைகிறது ” என்று ட்விட்டரில் எழுதியுள்ளார்.

28-வினாடிகள் கொண்ட வீடியோவில், விளையாட்டுத்தனமான ஜம்போ யானை தெளிப்பானை உடைத்தபின் மகிழ்ச்சியுடன் தண்ணீரில் நனைவதைக் காணலாம்.

ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 6000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது மற்றும் 50000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது.

 சில கமெண்டில் பதிவுகள்:

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Elephant playing with water sprinkler video viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X