இயற்கை நம்மை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை, இதை உறுதிப்படுத்தும் மற்றும் ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் வருகிறது. அதில், ஒரு யானை அமைதியாக - ஏறக்குறைய விளையாட்டுத்தனமாக - ஒரு மனிதனை அதன் பாதையில் இருந்து விலகிச் செல்லும்படிக் கேட்டுக்கொள்கிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Elephant politely asks man to step aside in viral video; wins hearts online
சமூக ஊடகங்களில் பலரும் விருப்பம் தெரிவித்துள்ள இந்த வீடியோ, பாதையில் குறுக்கே நின்ற மனிதனை ஒதுங்கி செல்லுமாறு யானை சைகை செய்கிறது, யானையின் வழியில் தான் இருப்பதை உணர்ந்தவுடன் அந்த நபர் பயத்துடன் விரைவாக ஒதுங்கிச் செல்வதைக் காட்டுகிறது. யானையின் இணக்கமான மற்றும் அக்கறையுள்ள நடத்தை வனவிலங்குகளின் மென்மைக்கு உண்மையான சான்றாகும் என்று பலர் கூறினர்.
நேச்சர் இஸ் அமேசிங் (@AMAZlNGNATURE) என்ற எக்ஸ் பகிரப்பட்டுள்ள 23 வினாடிகள் நேரம் கொண்ட இந்த வீடியோ: "யானை மெதுவாக மனிதனுக்கு தான் வழியில் இருப்பதை நினைவூட்டுகிறது" என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
Elephant gently reminding the human that he is in the way. pic.twitter.com/Ft6P7ICUf8
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 14, 2024
இந்த வீடியோ 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “நான் யானைகளை விரும்புகிறேன். அவைகள் மிகவும் மென்மையானவை, புத்திசாலிகள்.” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர் எழுதினார், “எவ்வளவு கண்ணியமாக இருந்தது; அதன் தாய் அதற்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. இதுவே ஏதாவது, மனிதன் என்றால், அந்த நபரை திட்டியிருப்பார் /அல்லது அந்த நபரை வழியிலிருந்து தள்ளிவிட்டிருப்பார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில், ராஜா என்ற யானை, பயணிகளிடம் இருந்து சாலையில் வாகனங்களில் செல்வர்களிடம் திண்பண்டங்களை "வரி வசூலிக்கும்" தனித்துவமான பழக்கத்திற்காக பிரபலமானது. 40 வயதுடைய யானை புத்தல-கதரகம வீதியில் நிற்கிறது, வாகனங்கள் கடந்து செல்லும் போது அவற்றை நிறுத்தி, தின்பண்டங்கள், உணவுப் பொருட்களை கேட்கிறது.
வாகனங்கள் நிறுத்தப்படும் போது, யானை ராஜா நம்பிக்கையுடன் தனது தும்பிக்கையை நீட்டி, ஓட்டுனர்களை தன் பங்குக்கு கேட்கிறது. அடிக்கடி முன்னும் பின்னுமாக சென்று, உறுதியான டோல் வசூலிப்பவராக எப்போதுமே அதற்குரிய தொகையைப் பெறுகிறது. அதன் "உணவு வரி" தீர்க்கப்பட்ட பின்னரே யானை பயணிகளை தொடர்ந்து செல்ல அனுமதிக்கிறது. உள்ளூர்வாசிகள் ராஜாவின் வழக்கத்தை விரும்புகின்றனர், அதை மிகவும் நம்பகமான வரி வசூலிப்பவர் என்று அழைக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.