வனவிலங்குகள் வசிக்கும் காடுகள் வழியே பயணம் செய்பவர்கள், வனவிலங்குகளிடம் அன்பு, பரிவு காட்டுவதாக நினைத்துக்கொண்டு உணவு கொடுத்து பழகுகிறார்கள். ஆனால், அந்த வனவிலங்குகள், அந்த உணவுகளுக்கு பழக்கமாகிவிடுகின்றனர். பின்னர், உணவு தேடிச் செல்வதில் சோம்பல் அடைவதோடு, மனிதர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக உணவுப் பொருட்களை பறித்துச் செல்லும் நிலை ஏற்படுகின்றன. பிறகு அது வனவிலங்குகள் மனிதர்கள் மோதலாக மாறுகிறது.
அதனால்தான், வனவிலங்குகளுக்கு உணவு தராதீர்கள், அதற்கான உணவை அதுவே தேடிக்கொள்ளும். உணவு கொடுத்து பழக்காதீர்கள் என்று வனத்துறையினர் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், மக்கள் அதை மதிப்பதே இல்லை.
அந்த வரிசையில், மனிதர்களின் உணவின் சுவைக்கு பழகிவிட்ட ஒரு காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கீழ் தளத்தில் நின்று கொண்டு இரண்டு கால்களையும் தூக்கி சுவற்றில் எட்டி வைத்துக்கொண்டு முதல் மாடியில் இருக்கும் வீட்டில் உணவை தும்பிக்கையால் எடுக்க முயற்சி செய்கிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த யானை முதல் மாடிக்கு எம்.பி உணவு எடுப்பது குறித்து, “1வது தளத்தை அடைந்துவிட்டது. பின்னங்காலில் இரண்டாயிரம் கிலோ உடல் எடையைத் தாங்கி மனித உணவுக்கு அடிமையானதற்கான உணர்வு மிகப்பெரியதாக இருந்திருக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த யானை இரண்டு பின்னங்கால்களில் நின்று முன்னங்கால் இரண்டையும் தூக்கி சுவற்றில் வைத்து முதல் தளத்தில் இருக்கும் வீட்டில் தும்பிக்கையை நுழைத்து மனிதர்களின் உணவைத் தேடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் யானையின் செயலை வியந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களே பாருங்கள், இந்த மனுஷங்க உணவின் சுவைக்கு எந்த அளவுக்கு அடிமையாகி இருந்தால் இப்படி ஒரு சாகசத்தில் ஈடுபடும். மனுஷங்க சாப்பிடுற உணவு செம டேஸ்ட்டியா இருக்கு, அதான் இந்த யானை முதல் மாடிக்கு எட்டி நின்று உணவைத் தேடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“