ஆட்டுக்குட்டி போல குட்டியானையை தோளில் சுமந்த தமிழக வன ஊழியர் – டிரெண்டிங் ஆகும் போட்டோ

சரத்குமார், குட்டி யானையை, தோளில் சுமந்தபோது எடுத்த போட்டோ, அந்த நேரத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஐஎப்எஸ் அதிகாரி தீபிகா பாஜ்பாய், பிளாஸ்பேக் என்ற பெயரில், மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.

By: Updated: April 15, 2020, 12:18:52 PM

பள்ளத்தில் விழுந்த குட்டியானையை மீட்டு, தோளில் சுமந்து அதை தாய் யானையிடம் சேர்த்த வனக்காவலரின் போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த நிகழ்வு 2017ம் ஆண்டில் நடைபெற்றிருந்தது. அப்போதே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஐஎப்எஸ் அதிகாரி தீபிகா பாஜ்பாய், மீண்டும் அந்த போட்டோவை, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த போட்டோ, தற்போது டுவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் வனப்பாதுகாவலராக இருந்தவர் பழனிச்சாமி சரத்குமார். 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ம் தேதியன்று, பெண் யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்று போக்குரவத்துக்கு தடை ஏற்படுத்துவதாக அவருக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. சரத்குமார் உள்ளிட்ட வன ஊழியர்கள், பட்டாசுகள் வெடித்தும், பெரிய பெரிய கருவிகளால் ஒலி எழுப்பியும் அந்த யானையை அப்பகுதியிலிருந்து விரட்டினர். தனது குட்டி யானை பள்ளத்தில் விழுந்ததால், தான் தாய் யானை அங்கு அந்த களேபரத்தில் ஈடுபட்டிருந்ததை சரத்குமார் உணர்ந்தார்.

சிறிய பள்ளத்தில் குட்டி யானை விழுந்து கிடப்பதை பார்த்த சரத்குமார், சக ஊழியர்களின் உதவியுடன் அதனை மீட்டார். தனது உடல் எடையை விட அதிகமாக இருந்த குட்டி யானையை தோளில் சுமந்து பல கிலோமீட்டர் தொலைவு நடந்து அதனை அதன் தாய் யானையிடம் சேர்த்தார்.
சரத்குமார், குட்டி யானையை, தோளில் சுமந்தபோது எடுத்த போட்டோ, அந்த நேரத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஐஎப்எஸ் அதிகாரி தீபிகா பாஜ்பாய், பிளாஸ்பேக் என்ற பெயரில், மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.

இநந்த போட்டோ, தற்போது டுவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ள நிலையில் நெட்டிசன்களால், சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Elephant rescue tamil nadu coimbatore mettupalayam forest guard trending netizens twitter

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X