New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/26/1NLjDbz9DYXGh2S1hqbH.jpg)
சாலையில் வலம் வந்த ஒற்றை கொம்பு யானை
சாலையில் வலம் வந்த ஒற்றை கொம்பு யானை
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தொண்டாமுத்தூர், சாடிவயல், மருதமலை, தடாகம் பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.
யானைகளின் இடம் பெயர் காலம் என்பதால் கேரள வனப் பகுதியில் இருந்து தமிழக வனப் பகுதிக்குள் வரும் யானை கூட்டம் சிறுமுகை பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதி வழியாக முதுமலை, பந்திப்பூர் வனப் பகுதிகளுக்கு செல்வது வழக்கம், அவ்வாறு வலசை செல்லும் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுவது தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு வரும் யானைகளால் பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படுவதால் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் பகுதியில் நேற்று இரவு ஒற்றை யானை புகுந்து உள்ளது.
கோவையில் சாலையில் வலம் வந்த ஒற்றை கொம்பு காட்டு யானை....! #coimbatore #elephant pic.twitter.com/jvyHdx9s91
— Indian Express Tamil (@IeTamil) January 26, 2025
இரவு முழுவதும் விவசாய நிலத்தில் இருந்த யானை இன்று காலை 6.30 மணி அளவில் அங்கு இருந்து வெளியேறி வனப் பகுதியை நோக்கி சென்றது. சாலையில் ஒற்றை கொம்பு யானை நடந்து வருவதை பார்த்த முதியவர் ஒருவர் பயத்தில் ஓடிச் சென்றார்.
இந்த காட்சிகள் அங்கு இருந்த சி.சி.டி.வி யில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.