காட்டிற்கு நடுவில் தண்ணீர் குடிக்க சென்ற மான் குட்டியை வேட்டையாட முற்பட்ட முதலையை காலால் நசுக்கி, காப்பாற்றும் யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த காட்சியில் உணவிற்காக தண்ணீருக்குள் பதுங்கியிருந்த முதலை, தண்ணீர் அருந்த வந்த மான் குட்டியை வேட்டையாட முற்பட்டது.
அந்த தருணத்தில் அங்கே நீர் அருந்த வந்த யானைக்கூட்டத்தில், ஒரு யானை மட்டும் இதை பார்த்து தனது காலால் முதலையை அமுக்கி தனது கோவத்தை வெளிப்படுத்துகிறது.
யானையின் இந்த செயலால் மான்குட்டி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.