scorecardresearch

ப்பா எவ்ளோ உயரம்… பலா மரம் ஏறும் யானை; வைரல் வீடியோ

viral video: யானை ஒன்று உயரமான பலா மரத்தில் இரண்டு கால்களில் ஏறி நின்று பலாப் பழங்களை எட்டிப் பறிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ப்பா யானை எவ்ளோ உயரத்தில் ஏறி பலாப் பழம் பறிக்கிறது பாருங்கள்.

Elephant Using hind legs to jack up for the jackfruit, பலா மரம் ஏறும் யானை, வைரல் வீடியோ, elephant video goes viral, viral video, elephant viral video
வைரல் வீடியோ

viral video: நிலத்தில் வாழும் விலங்கினங்களில் மிகவும் பெரிய விலங்கினமான யானை உணவுக்காக எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் முயற்சி செய்து எடுத்துவிடும். அந்த வகையில், யானை ஒன்று உயரமான பலா மரத்தில் இரண்டு கால்களில் நின்று பலாப்பழங்களை எட்டிப் பறிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ப்பா எவ்ளா உயரத்தில் ஏறி பலாப் பழம் பறிக்கிறது பாருங்கள்.

சமூக ஊடகங்களின் காலத்தில் நாள் தோறும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பெரும்பாலும் வன விலங்குகள் வீடியோக்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்திய வனத் துறை அதிகாரிகள் வனவிலங்குகள் பற்றி வனத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் வன விலங்குகளைப் பற்றி ஒரு புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஒரு உயரமான பலாமரத்தில் மிகவும் உயரத்தில் இருக்கும் பலாப் பழங்களை ஒரு யானை இரண்டு கால்களில் எட்டி நின்று தும்பிக்கையை நீட்டிப் பறிக்கிறது. இந்த வீடியோவைப் பார்க்கும்போது இவ்வளவு பெரிய யானை எவ்வளவு உயரத்தில் இருக்கும் பலாப்பழங்களைப் பறிக்கிறது பாருங்கள் என்று வியக்க வைக்கிறது.

இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “பலாப்பழம் பறிப்பதற்கு யானை பின்னங்கால்களைப் பயன்படுத்துகிறது. யானைகளின் பின் கால்கள் மிகவும் வலிமையானவை. யானையின் பின் கால்கள் 4000 கிலோவுக்கு மேல் தாங்கி நிற்பதை கற்பனை செய்து பாருங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Elephant using hind legs to jack up for the jackfruit video goes viral