New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/07/cats-5.jpg)
Elephant Viral Video : Elephant trashes the litter into trash bin
யோசிச்சுப் பாத்தா அது தான் உண்மையாவும் இருக்கு!
Elephant Viral Video : Elephant trashes the litter into trash bin
Elephant Viral Video : ஆயிரம் சொல்லுங்க என்ன தான் இருந்தாலும் யானைகளுக்கு மனிதர்களை விட அறிவும், சுற்றுப்புறம் பற்றிய அக்கறையும் ஜாஸ்தியா தான் இருக்கு.
நாம் எங்காவது வெளியில் சென்றால் குறிப்பாக, சுற்றுலாவிற்கு, தியேட்டர், பார்க், பீச், ஹோட்டல் என்று எங்கு போனாலும், நம் கையில் இருக்கும் குப்பையை நாம் குப்பைத் தொட்டியைத் தேடி பார்த்துக் கொண்டு போய் போடுவதே கிடையாது. சாப்பிட்டா அந்த ப்ளாஸ்டிக் ப்ளேட் அங்கேயே, வாட்டார் பாட்டில் எங்காயவது தூரமா எரிஞ்சிடுவோம்.. ப்ளாஸ்டிக் பேப்பர், பை எல்லாம் மொத்தமா சுருட்டி தூக்கி வீசிடுறது.
ஆனால் இங்கே ஒரு அழகான யானை என்ன செய்து தெரியுமா? குப்பையை எடுத்துக்கொண்டு போய் குப்பை தொட்டியில் போட்டுட்டு அதோட வேலைய பாக்க போய்டுது.
Elephant caught throwing away litter into a trash can at a safari outpost pic.twitter.com/vOe8FTk65e
— Nature is Lit???? (@NaturelsLit) 12 July 2019
இந்த வீடியோவை @NatureIsLit என்ற ட்விட்டர் அக்கௌண்ட் பதிவு செய்ய, அந்த வீடியோ வைரலாக எல்லா பக்கமும் பேசப்பட்டது. சிலர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செஞ்சு யானைகளை விட மனுஷங்களுக்கு அறிவு ரொம்ப கம்மி தான் போல என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்... யோசிச்சுப் பாத்தா அது தான் உண்மையாவும் இருக்கு!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.