elephant viral video :கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒற்றை காட்டு யானை ஒட்டு மொத்த கிராமத்தையும் பயத்தில் உறைய வைத்துள்ளது. இந்த யானையின் அட்டாகங்கள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கடவுளின் தேசமான கேரளாவில் யானைக்கு பஞ்சமே இருக்காது. நாம் நம் வீடுகளில் நாய், பூனை,கிளியை வளர்ப்பு பிராணிபோல் வளர்ப்பது போல கேரளாவில் சேட்டன்கள் யானைகளை வீடுகளில் ஆசையாக வளர்பார்கள். அந்த யானைகளுக்கு என்று தனி இடம், உணவு என பிரம்மாண்டமாக கேரளா யானைகள் வளர்க்கப்படுகின்றன.
இப்படி யானைகளுடனே வாழும் சேட்டன்களை காட்டில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை படாதபாடுப்படுத்தும் சம்பவம் பாலகாட்டில் நிகழ்ந்துள்ளது. அந்த யானையின் பெயர் வடக்குமதன் கணேஷன் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஊருக்குள் புகுந்த கணேஷன் கண்ணில் பட்டதையெல்லாம் தூக்கி எறிந்து பந்தாடி வருகின்றான். கணேஷனை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சித்து வந்தும், அவர்கள் கண்ணில் மணலை தூவி விட்டு கணேஷன் அட்டகாசம் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கணேசனால் 1 கார், 2 மின்சார தூண்கள், மரங்கள், வீடுகள் ஆகியவை சேதம் அடைந்துள்ளன.