New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/16/N5z28GAB559YFIVPtgpf.jpg)
நிலநடுக்கம் சான் டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பரவலாக உணரப்பட்டது (Image Source: @apnews/Instagram)
நிலநடுக்கம் சான் டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பரவலாக உணரப்பட்டது (Image Source: @apnews/Instagram)
தெற்கு கலிபோர்னியாவில் திங்கள்கிழமை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மையம் சான் டியாகோ கவுண்டியில் அமைந்திருந்தாலும், இதன் அதிர்வுகள் வடக்கே லாஸ் ஏஞ்சல்ஸ் வரை உணரப்பட்டன. நிலநடுக்கத்தின் தாக்கத்தை படம்பிடித்த பல வீடியோக்களில், சான் டியாகோ சஃபாரி பூங்காவில் உள்ள யானைகள் நிலநடுக்கத்தின்போது தங்கள் கன்றுகளைப் பாதுகாக்க தன்னிச்சையாக செயல்படும் ஒரு நெகிழ்ச்சியான காட்சி சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
திங்கள்கிழமை காலை சான் டியாகோ சஃபாரி பூங்காவில் உள்ள யானைகள் அடைப்பிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வைரல் வீடியோவில், ஐந்து ஆப்பிரிக்க யானைகள் காலை வெயிலில் அமைதியாக நிற்பதைக் காட்டுகிறது. திடீரென்று, நிலநடுக்கம் தாக்கியதும் கேமரா குலுங்கத் தொடங்குகிறது, யானைகள் வெவ்வேறு திசைகளில் சிதறி ஓடுகின்றன.
சில நொடிகளுக்குப் பிறகு, வயதான யானைகளான நட்லுலா, உம்ங்கனி மற்றும் கோசி ஆகியவை இரண்டு 7 வயது கன்றுகளான ஜூலி மற்றும் முகாயாவைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை விரைவாக உருவாக்குகின்றன, அவற்றை எந்த ஆபத்திலிருந்தும் பாதுகாக்கின்றன என்று என்.பி.சி செய்தி தெரிவித்துள்ளது. அந்த குழு பல நிமிடங்கள் நெருக்கமாக ஒன்றுகூடி நிற்கிறது, பெரிய யானைகள் விழிப்புடனும் காதுகளை அசைத்தபடியும் இருக்கின்றன.
இங்கே வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ விரைவாக சமூக வலைதளங்களி பரவி வைரலானது. சமூக ஊடக பயனர்களிடமிருந்து நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பெற்றது. “இது மிகவும் விலைமதிப்பற்றது, இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்” என்று ஒரு பயனர் எழுதினார். “யானைகளுக்கு நிலநடுக்க பயிற்சிகூட இருக்கிறது. எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.
“சிமி பள்ளத்தாக்கில் நான் நிலநடுக்கத்தை உணரவில்லை, ஆனால, யானைகள் தாங்கள் உணர்ந்ததற்கு எப்படி பிரதிபலித்தன என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அவை மிகவும் நுண்ணுணர்வு மற்றும் பாதுகாப்பு உணர்வுள்ள உயிரினங்கள். நான் அவற்றை மிகவும் நேசிக்கிறேன்” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கம் சான் டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சுமார் 120 மைல் தூரத்திற்கு பரவலாக உணரப்பட்டது. சான் டியாகோ கவுண்டியில், இது பாறை சரிவுகளை ஏற்படுத்தியது. இதனால், பாறைகள் கிராமப்புற சாலைகளில் விழுந்தன மற்றும் நிலநடுக்க மையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஜூலியன் என்ற சிறிய மலை நகரத்தில் அலமாரிகளில் இருந்து பொருட்கள் கீழே விழுந்தன. இருப்பினும், காயம் அல்லது உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று என்.பி.சி செய்தி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.