கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காட்டு யானைகள் சுதந்திரமாக சாலைகளைக் கடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மனிதர்களுக்குதான் 144 தடை, யானைகளுக்கு அல்ல எனக் கூறுவது போல உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் 144 தடை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால், நாடு முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் முழுவதுமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால், கடந்த வாரம் ஊட்டியில் சாலைகளில் காட்டெருதுகள், புனுகு பூனை உள்ளிட்ட வன விலங்குகள் வலம் வந்தன.
கொரோனா அச்சத்தால் மனிதர்களுக்குதான் 144 தடை உத்தரவு வன விலங்குகளுக்கு இல்லை என்று கூறுவதைப் போல, தமிழகத்தில் வன விலங்குகள் உணவு, தண்ணீருக்காக சுதந்திரமாக சாலைகளைக் கடந்து வருகின்றனர்.
6, 2020
தமிழக வனச் சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையைக் கடப்பதை வனத்துறையினர் எடுத்த வீடியோவை ஐ.எஃப்.எஸ். அதிகாரி பிரவீன் கஸ்வான், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
5, 2020
வனத்துறை உயர் அதிகாரி பிரவீன் கஸ்வான், தமிழகத்தில் யானைகள் கூட்டமாக சாலையை கடக்கும்போது என்று குறிப்பிட்டு யானைகள் கூட்டமாக சாலையைக் கடக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதே போல வனப்பகுதியில் உள்ள ஒரு மண் சாலையில், யானைகள் சாவகாசமாக கடந்து செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், சுதந்திரமாக காட்டு யானைகள் உலாவரும் இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்து பரவசம் அடைந்து வருகின்றனர்.