Viral video: மனிதர்களைப் போல யானைகள் மீது பழி சொல்பவர்கள் யாரும் இருக்க முடியாது. காடுகளில் யானைகள் சுற்றித் திரியும் இடத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள், ரிசார்ட்டுகள் கட்டிவிட்டு, யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் என்று கூறுவது. யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து சாலைகள் போட்டுவிட்டு, சாலைகளை மறித்து யானைகள் அராஜகம் என்று கூறுவது, அதை எல்லாவற்றையும் விட சில மனிதர்கள் மதவெறியில் வன்முறையில் ஈடுபடுவார்கள், ஆனால், யானைகளைப் பார்த்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது என்பார்கள். பாருங்கள், இந்த மனிதர்கள் யானைகள் மீது எப்படி அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள்.
உண்மையில் சமூக விலங்கான யானைகளிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. சாலையைக் கடக்கும்போதுகூட என்ன ஒரு ஒழுங்கில் வரிசையாக சாலையைக் கடக்கின்றன பாருங்கள். யானைகள் கூட்டம் வரிசையாக சாலையைக் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வனவிலங்குகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வனங்களில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், யானைகள் கூட்டமாக வரிசையாக சாலையைக் கடக்கும் வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Elephants are known for their memory. They often use same corridors for movement. So if you see such signages on road; there is a story behind it. These signages are put based on historical data. Give them the way. pic.twitter.com/EYUYIh4FwK
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 21, 2024
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பதிவிட்டிருப்பதாவது: “யானைகள் நினைவாற்றலுக்கு பெயர் பெற்றவை. அவைகள் அடிக்கடி ஒரே நடைபாதையை போவதற்கு பயன்படுத்துகின்றன. எனவே, சாலையில் இதுபோன்ற பலகைகளைக் கண்டால்; அதன் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த அடையாளங்கள் வரலாற்று தரவுகளின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன. அவைகளுக்கு வழி விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
யானைகள் கூட்டமாக அதே நேரத்தில் வரிசையாக ஒரு ஒழுங்கில் சாலையைக் கடக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள், பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.