New Update
/indian-express-tamil/media/media_files/rNLDpl5yHOTKc7hK4RVX.jpg)
காட்டில் கூட்டமாக மேய்ச்சலுக்குச் செல்லும் யானைகள் (Image Source: @ParveenKaswan)
காட்டில் கூட்டமாக மேய்ச்சலுக்குச் செல்லும் யானைகள் (Image Source: @ParveenKaswan)
இது சமூக வலைதளங்களின் காலம், நாள்தோறும் ஆயிரக் கணக்கான படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் வன விலங்குகளைப் பற்றிய வீடியோக்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டு அதிக அளவில் பகிரப்படுகின்றன. வனவிலங்குகள் படங்கள், வீடியோக்களின் மீது மனிதர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
வன விலங்குகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் வனத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் வனத்துறையின் பணிகள் குறித்து தெரிவிக்கும் விதமாகவும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் நிறைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், காட்டில் கூட்டமாக மேய்ச்சலுக்கு செல்லும் யானைக் கூட்டத்தின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
They all are having a busy morning. Small and big munching on our last years created grassland. Grasslands are lifeline of wild landscapes. pic.twitter.com/QN31aTgjzu
— Parveen Kaswan (@ParveenKaswan) July 24, 2024
காட்டில் புல்வெளியில் யானைகள் கூட்டமாக செல்லும் அழகான இந்த வீடியோ பார்ப்பவர்களின் இதயங்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது.
இந்த வீடியொ குறித்து, ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “அவை எல்லாம் பரபரப்பான காலைப் பொழுதைக் கழிக்கின்றன. கடந்த ஆண்டுகளில் சிறிய மற்றும் பெரிய புல்வெளியை உருவாகியது. புல்வெளிகள் காட்டு நிலப்பரப்புகளின் உயிர்நாடி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.