Viral Video: காடு, மலை, கடல் எல்லாமே பல அதிசயங்களை மறைத்து வைத்திருக்கிறது. இயற்கையை நேசிப்பவர்களால் மட்டுமே அதை காணும் பாக்கியம் கிடைக்கிறது. அப்படி, ஒரு அதிசயமாக, பொன்னிற மாலை வெளிச்சத்தில் பசுமையான புல்வெளிகளால் ஆன பச்சைக் கம்பளத்தில் யானைகள் கூட்டமாக ஒன்றுகூடி நடந்து செல்லும் வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்ஜய் குமார் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், பச்சைக் கம்பளம் விரித்தாற்போன்ற ஒரு பசுமையான புல்வெளியில் பொன்னிற மாலை வெளிச்சத்தில் யானைகள் கூட்டமாக நடந்து செல்கின்றன. இந்த அழகான காட்சியைப் பார்க்கும்போதே மனம் இயற்கையை ரசிக்கத் தொடங்கி விடுகிறது. இந்த வீடியோ பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
It's an awesome &soul soothing sight to watch the herd of Asiatic elephant in golden evening light, forage & march on the green carpet of dhikala grassland adjoining the backwaters of Ramganga river in Corbett TR. @ntca_india @moefcc @ReserveCorbett @rameshpandeyifs pic.twitter.com/G8HoRLo5cs
— Sanjay Kumar IAS (@skumarias02) July 3, 2024
இந்த வீடியோவை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சஞ்ஜய் குமார் ஐ.ஏ.எஸ் பதிவிடிருப்பதாவது: “ஜிம் கார்பெட் புலிகள் காப்பாகத்தில் உள்ள ராமகங்கா ஆற்றின் உப்பங்கழியை ஒட்டியுள்ள திகலா புல்வெளியின் பச்சைக் கம்பளத்தின் மீது பொன்னிற மாலை வெளிச்சத்தில், மேய்ந்துகொண்டே & அணிவகுத்துச் செல்லும் ஆசிய யானைக் கூட்டத்தைப் பார்ப்பது ஒரு அற்புதமான & ஆன்மாவை அமைதிப்படுத்தும் காட்சி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து ஒரு எக்ஸ் பயனர் குறிப்பிடுகையில், “மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நாம் விரும்பும் வழியில் ஒரு வாழ்க்கையை வாழுங்கள், நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயங்களைச் செய்யுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு எக்ஸ் பயனர், “இதோ ஒரு மாயஜால தருணம்” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.
இன்னொரு எக்ஸ் பயனர், “காடுகளின் காவலர்கள் கூட்டமாக ஒன்றாக வைத்து காப்பாற்றுவதும் உயிர் வாழ்வதும் இதயத்தை நிறைக்கும் காட்சி.” என்று யானைகள் கூட்டமாக செல்வதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் ஒரு யானையைப் பார்த்தாலே மனிதர்களுக்கு மகிழ்ச்சிதான். மனம் யானையின் பலத்தைப் பெற்றுவிடுகிறது. அதிலும் ஒரு யானைக் கூட்டத்தைப் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.