நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினம் யானை. வனவிலங்கான யானைகள் கூட்டமாக சேர்ந்து வாழும் ஒரு சமூக விலங்கு. யானைகள் தங்கள் உணவுக்காக காடுகளில் ஒரு நாளைக்கு 50 கி.மீ வரை நடக்கின்றன.
வன விலங்குகளில் நுண்ணுணர்வு மிக்கவை. மிகவும் நினைவாற்றல் மிக்கவை. யானைகளே காடுகளின் பாதுகாவலர்கள். யானைகளே காடுகளின் பரப்பை அதிகரிப்பவர்கள்.
யானைகள் - மனிதர்கள் இடையேயான மோதல் சமீப காலமாக அதிக அளவில் நிகந்து வருகிறது. இதற்கு காரணம், யானைகளின் இருப்பிடமான காடுகளில் மனிதர்கள் கட்டடங்களைக் கட்டியது முக்கிய காரணம். சில நேரங்களில் யானைகள் உணவு தேடி காடுகளுக்கு வெளியே வரும்போது இந்த மோதல் ஏற்படுகிறது. அப்போது எல்லாம், யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக மனிதர்கள் யானைகள் மீதே பழிபோடுகின்றனர். ஆனால், உண்மையில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்தது மனிதர்கள்தான்.
யானைகளிடம் கற்பதற்கு மனிதர்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. யானைகளின் ஒற்றுமையான சமூக வாழ்க்கை. மூத்தவர்களுக்கு கீழ் படிந்து நடத்தல், நினைவாற்றல், சமூகமாக பாதுகாப்பாக இருத்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில், சமூக ஊடகங்களின் காலத்தில் நாள்தோறும் யானைகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், ஏரியில் யானைகள் வரிசையாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த அழகான வீடியோவை பிரியன் மொசேகா (Bryan Moseka) என்பவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
In their quiet, majestic march, elephants offer us a blueprint for life, where discipline, empathy, and collective responsibility creates harmony. Reminding us that true strength lies not in individual capacity but in togetherness #Elephants #elephant #wildlife #lifelessons… pic.twitter.com/gvnQGs7iWQ
— Supriya Sahu IAS (@supriyasahuias) November 19, 2024
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு குறிப்பிடுகையில், “யானைகளின் அமைதியான, கம்பீரமான அணிவகுப்பில், யானைகள் வாழ்க்கைக்கான ஒரு வரைபடத்தை நமக்கு வழங்குகின்றன, அங்கே ஒழுக்கம், பச்சாதாபம் மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகியவை நல்லிணக்கத்தை உருவாக்குகின்றன. உண்மையான பலம் தனிமனித திறனில் இல்லை, ஒற்றுமையில் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து ஒரு எக்ஸ் பயனர் குறிப்பிடுகையில், “யானைகள், அவற்றின் அறிவு, ஒற்றுமை மற்றும் கருணை ஆகியவற்றால், வாழ்க்கை ஆசிரியர்களைப் போன்றது. நம் வாழ்வில் அவைகளின் இருப்பு அவைகள் நம் நல்வாழ்வை எவ்வளவு மேம்படுத்த முடியும் என்பதை நினைவூட்டுகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “அழகாகச் சொன்னீர்கள்! யானைகள் உண்மையாகவே நல்லிணக்கம் மற்றும் கூட்டு பலத்தின் சாரத்தை உள்ளடக்கியவை. அவற்றின் வாழ்க்கை முறை ஒற்றுமை, இரக்கம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்பின் சக்தியை நமக்குக் கற்பிக்கிறது. வனவிலங்குகள் மூலம் இத்தகைய ஆழமான வாழ்க்கைப் பாடங்களைக் கைப்பற்றியதற்கு நன்றி, பிரையன் மோசேகா.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பயனர் குறிப்பிடுகையில், “காட்டு யானைகள் மிகவும் ஒழுக்கமாக இருக்கும் அற்புதமான காட்சி” என்று கருத்து தெரிவித்ள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.