scorecardresearch

மகிழ்ச்சியாக சுற்றித் திரியும் யானைகள்; எவ்ளோ அழகா இருக்கு பாருங்க: வீடியோ

Viral Video: அமேசிங் நேச்சர் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும் 42.4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது.

elephant playing in water, elephant video, elephants moving through shallow water, elephant funny videos, viral video
யானைகள் வீடியோ

viral video: பொதுவாக சமூக ஊடகங்களில் யானைகளின் வீடியோக்கள் வனவிலங்குக் பிரியர்களை கவர்ந்து வைரலாகிவிடும். கால்பந்து விளையாடும் யானை முதல் பருவகால புல்வெளிகள் நிறைந்த செங்குத்தான சரிவுகளில் ஏறும் யானை வரை பல யானைகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை மகிழ்வித்து வருகின்றன. யானைகளின் வீடியோ என்றாலே ஒரு ஈர்ப்பு இருந்து வருகிறது.

​​மூன்று யானைகள் அடங்கிய யானைக் கூட்டம் பாமாயில் பனை மரங்களுக்கு இடையே குறுகிய நீரோடை போன்ற கால்வாயில் நடந்து செல்லும் வீடியோ பார்ப்பவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சுதந்திரமான யானைகள் ஆழமில்லாத கால்வாயில் ஆர்வத்துடன் மகிழ்ச்சியாக நடந்து செல்வதைப் பார்ப்பதற்கு எவ்ளோ அழகாக இருக்கிறது பாருங்கள். யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக, கேமராவுக்கு அருகில் வந்து, விளையாடும் வகையில் தண்ணீரை இரைக்கின்றன.

இந்த வீடியோவுக்கு “யானைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக, மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். அமேசிங் நேச்சர் ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும் 42.4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் வியந்து போகிறார்கள். ஒரு பயனர், “தங்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றன” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “அழகாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது பயனர் “யானைகள் எண்ணெய் பனை தோட்டத்தில் உள்ளது. அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் இல்லை.” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

சமீபத்தில், கர்நாடகாவின் மங்களூருவில் யானை ஒன்று குழந்தைகளுடன் கால்பந்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், அந்த யானை காட்டீல் துர்காபரமேஸ்வரி கோயிலில் மணி அடித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Elephants so beautiful to see happy and free video goes viral