கிரிக்கெட் விளையாடும் யானை; வாழைத் தோட்டத்தில் குருவிக்கூட்டை மட்டும் விட்டுச் சென்ற யானைக் கூட்டம்

இந்த வாரத்தில் வைரலான இந்த வீடியோக்கள் யானைகள் பற்றிய மக்களின் அபிப்ராயத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளது. இந்த இரண்டு வீடியோக்கள் பற்றியும் உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Elephants viral video of the week : Herd untouched a tree with a bird’s nest

யானைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அது செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் யாரால் தான் மனநிறைவுடன் பாராட்டாமலும் மகிழ்ச்சி அடையாமலும் இருக்க முடியும்? சமீபத்தில் கேரளாவில் யானை ஒன்று மனிதர்களுடன் கிரிக்கெட் விளையாட அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. கண்ணுபிரேம் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் யானை ஒன்று தன் தும்பிக்கையில் தென்னை மட்டையால் ஆன ”பேட்” வைத்திருக்கிறது.

Advertisment

அங்குள்ள மனிதர்கள் அந்த யானைக்கு பந்துவீச யானை சிக்ஸரும் ஃபோருமாக அடித்து நொறுக்கியது. இந்த வீடியோவை இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நிச்சயமாக இந்த யானைக்கு இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த 30 நொடி வீடியோவை 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

Elephants viral video 2

Advertisment
Advertisements

சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம் ஒன்று அங்குள்ள கிருஷ்ணசாமியின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து வாழைப்பழங்களை பறித்து உண்டது. கிட்டத்தட்ட அந்த தோட்டத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் இந்த யானைக் கூட்டத்தின் வருகையால் சேதாரமாகியது.

ஆனால் அங்கு ஒரே ஒரு மட்டம் எந்தவிதமான தாக்குதலுக்கும் ஆளாகாமல் இருப்பதை கண்ட கிருஷ்ணன்சாமி ஆச்சரியம் அடைந்தார். அங்கு ஒரு கூட்டில் புதிதாக பிறந்த குருவிக்குஞ்சுகள் இருப்பதால் யானை அதனை மட்டும் விட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவம் அங்கே இருக்கும் மக்களை ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சிக்கும் ஆளாக்கியுள்ளது யானைக் கூட்டம்.

இந்த வாரத்தில் வைரலான இந்த வீடியோக்கள் யானைகள் பற்றிய மக்களின் அபிப்ராயத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளது. இந்த இரண்டு வீடியோக்கள் பற்றியும் உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: