New Update
/indian-express-tamil/media/media_files/1UsMmKGBpJ2e3lhjArgz.jpg)
சென்னை விமான நிலையத்தில் ‘எலைட் மேட்ரிமோனி’ அலுவலகம்
சென்னை விமான நிலையத்தில் ‘எலைட் மேட்ரிமோனி’ அலுவலகம்
சென்னை விமான நிலையத்தில் ‘எலைட் மேட்ரிமோனி’ அலுவலகத்தின் போர்டைப் பார்த்த பயணி ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட, விமான நிலையத்திலும் மேட்ரிமோனியா என்று திகைத்துப்போன நெட்டிசன்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மேட்ரிமோனியல் ஏஜென்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி நெட்டிசன்களைத் திகைக்க வைத்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில், சர்வதேச பிராண்டுகள் முதல் கஃபேக்கள் வரை பல வகையான கடைகள் விமான நிலைய வளாகத்தில் வரிசையாக உள்ளன. பரபரப்பான விமான நிலையத்தில், ஒரு மேட்ரிமோனியல் ஏஜென்சி இருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக, பலரையும் திகைக்க வைத்துள்ளதோடு சிரிக்கவும் வைத்துள்ளது.
lol, MAA airport doesn’t have pharmacy/a convenience store in case of emergencies but look what I found 👇🏼 pic.twitter.com/QBhwbr3jsP
— A (@Aarsun) October 21, 2023
எக்ஸ் பயனர் @Aarsun இந்த ‘எலைட் மேட்ரிமோனியல்’ கடையின் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ப்திவின் தலைப்பில், "Lol, MAA விமான நிலையத்தில் அவசர காலங்களில் ஒரு மருந்தகம் / ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோர் இல்லை, ஆனால் நான் கண்டுபிடித்ததைப் பாருங்கள்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு குறித்து ஒரு கம்மெண்ட் செய்கையில், “விமான நிலையத்தில் எனக்கு 2 மணி நேர இடைவெளி உள்ளது, அந்த நேரத்தில் எனக்கு ஒரு வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்கலாம் என்று நினைக்கும் நபர்களை இந்த கடை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
“விமான நிலையத்தில் ஷாப்பிங் செய்யும்போது, நீங்கள் பல ஆடம்பர பிராண்டுகளைக் காண்கிறீர்கள். அவை முதன்மையாக வணிக-வகுப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. மற்றொரு காரணம் என்னவென்றால், ஒரு விமான நிலையத்தில் ஒரு பிராண்ட் இருப்பது அதன் சந்தைப்படுத்தல் வரம்பை விரிவுபடுத்த உதவுகிறது, ஏனெனில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் ஒரே நாளில்” என்று மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைப் படித்த ஒரு எக்ஸ் பயணர் இந்த மேட்ரிமோனியல் கடைக்கு சென்று நீங்கள் யாரையாவது மணமகளைத் தேடிக் கண்டுபிடித்தீர்களா என்று ஜாலியாகக் கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.