New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-3.jpg)
Emirates flight landing video
விமானம் மேகத்திலிருந்து வெளிவரும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது
Emirates flight landing video
Emirates flight landing video : எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மேகத்தை கிழித்துக் கொண்டு தரையிறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விமான பயணம் என்றாலே அதில் பல த்ரில்கள் அடங்கியிருக்கு. சில நேரம் அவை மோசமான அனுபவமாக மாறவும் வாய்ப்புண்டு. விமானத்தில் அடிக்கடி செல்பவர்களுக்கு இவை பெரிதாக தெரியாது. ஆனால், முதன் முதலாக விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது கிடைக்கும் பயம் கலந்த அனுபவம் கண்டிப்பாக நம் நினைவில் இருந்து அவ்வளவு எளிதாக மறந்து விடாது. இந்த நிகழ்வுக்கு பின்பு பைலட் தனது வாழ்நாளில் இந்த தருணத்தை ஈஸியில் மறந்து விட மாட்டார்.
சமீப காலமாக விமான சேவையில் எமிரேட்ஸ் நிறுவனம் தனக்கென தனி சிறப்பு பெயரை பெற்று வருகிறது. விமான சேவை தொடங்கி பயணிகள் சேவை வரை எமிரேட்ஸ் நிறுவனத்தின் தரம் பயணிகளால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மேகத்தை கிழித்துக் கொண்டு தரையிறங்கிய பிரம்மாண்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகின.
அந்த விமானம் மேகத்திலிருந்து வெளிவரும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த விமான காட்சியை எமிரேட்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.இந்த வீடியோ பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.வீடியோவை பார்த்த பலரும் அந்த விமானத்தை ஓட்டிய பைலட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.
Now that’s how you make a grand entrance. Video credit: Tom Jones pic.twitter.com/ojAOguED4D
— Emirates Airline (@emirates) July 31, 2019
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் எமிரேட்ஸ் நிறுவனம் பயணிகளிடம் பெரும் பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.