ஈரோடு கிழக்குத் தேர்தல் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு; பாராட்டு விழா - சமூக வலைத்தளங்களில் போஸ்டர் வைரல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்த்து தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு, பாராட்டு விழா நடத்தப்படும் என ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பாக எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் வேட்பாளர்களாக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisment
வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரசியல் கட்சியினர், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீட்டு முகப்பில் அடையாளக் குறியீடு குறித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்த்து தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு, பாராட்டு விழா நடத்தப்படும் என ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வைப்பதாகவும் அதற்கு ஏற்ப பணம் வழங்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம், வாக்காளர்களுக்கு தினம் தினம் கறி விருந்து என ஈரோடு கிழக்கு பரபரப்பாக உள்ளது. கிழக்கு தொகுதி தேர்தல் விதி மீறல் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்றும், கண்டு காணாத நிலையில் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தநிலையில், தேர்தல் ஆணையத்தின் பாரபட்ச நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும் எனக் எழுதப்பட்டுள்ளது. நானும் தமிழன் ராஜேஸ் கண்ணன் என்ற பெயரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.