இடைத் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த பயனும் இல்லை என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம். எல்.ஏ. வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமுருகன் ஈ.வெ.ரா ஜனவரி மாதம் 4-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-க்கு அந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மைய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த கமல் இதை தெரிவித்தார். தேமுதிக தனியாக போட்டியிட உள்ளது.
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்பு பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ” இடைத் தேர்தல் என்பது சாக்கடையை போன்றது. இதை தெரிந்தும் எப்படி இதில் காலை வைக்க முடியும். இடைத் தேர்தல் என்றாலே பண பலம்தான் வெற்றி பெறும். இப்போது ஆட்சி செய்பவர்களும், அதுபோல முன்பு ஆட்சி செய்தவர்களும், இடைத் தேர்தலில் பணம் கொடுத்து மக்களை வாங்கி, போலி வெற்றியை பெறுகிறார்கள். இதனால் இடைத் தேர்தலில் போட்டியிடுவதில் பலனில்லை. மேலும் காலத்தையும் சக்தியை வீணாக செலவு செய்ய விரும்பவில்லை “ என்று அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.