New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-31.jpg)
facebook today viral video
சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் பாம்பை பத்திரமாக மீட்டனர்.
facebook today viral video
facebook today viral video : பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். படைக்கே அஞ்சாதவர்கள் கூட பாம்புக்கு அலறுவார்கள். பார்ப்பதற்கே ஒருவிதமாக அறுவறுப்பான தோற்றத்தை தரும் பாம்புகள் மனிதர்களை அடிக்கடி அச்சுறுத்துவதில் கில்லாடிகள்.
தொடர்ந்து இணையத்தில் பலவகையான பாம்பு வீடியோக்கள் வெளிவந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சிரிப்பை மூட்டும். ஆனால் இன்னும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கே பயத்தையும் பதற்த்தையும் ஏற்படுத்தும்.இந்த வீடியோ எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். இதுவரை இந்த வீடியோவை 3 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பார்த்த இணையவாசிகள் பலர்ரும் “நால்லா வேணும்” இந்த டயலாக்கை தான் பெரும்பாலும் பதிவு செய்துள்ளனர்.
அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில் பார்க்கலாம் வாங்க. டெல்லியின் புறநகர் பகுதி ஒன்றில் அரிய வகை விஷபாம்பு ஒன்று குடியிருப்பில் புகுந்தது. இந்த பாம்பை பிடிக்க பாம்பு பிடிக்கும் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் பாம்பை பத்திரமாக மீட்டனர்.
அந்த குழுவில் இருந்த இளைஞர் ஒருவர், பிடித்த பாம்பை கையில் ஏந்திய படி ஃபேஸ்புக்கில் லைவ் அடித்தார். அதுமட்டுமில்லை பாம்புடன் பயமே இல்லாமல் விளையாடுவது சில வித்தைகளை காட்டினார். பாம்பை தொடர்ந்து வெறுப்பேற்றினார்.
இதனால் கோபமடைந்த அந்த பாம்பு அந்த இளைஞரின் மண்டையை தலையைப் பதம் பார்த்தது. இதையடுத்து தலையில் காயத்துடன் அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ Reptile Hunter என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்படப்பட்டுள்ளது.இப்போது சொல்லுங்கள் வீடியோவை பார்த்த பின்பு உங்கள் கருத்து என்ன?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.