New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-21.jpg)
facebook viral video today
அவரின் குரலை நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்கள்
facebook viral video today
facebook viral video today : உணவு டெலிவரி செய்ய வந்த இடத்தில் ஜோமாட்டோ ஊழியர்,கஸ்டமருக்கு பாடல் ஒன்றை பாடிக்காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
எந்தக் கலையாகவும் துறையாகவும் இருக்கட்டும், ஒருவர் அதில் தேர்ந்த அறிவு பெற்றிருந்தால் அதை வெளிப்படுத்தினால் மட்டும்தான் அதற்கு மதிப்பிருக்கும், கவனம் பெறும். கடின முயற்சிதான் ஒருவரின் அறிவை, திறமையை வெளியே கொண்டு வரும்; அவரை இன்னாரென்று உலகுக்கு அடையாளம் காட்டும்; மேலும் மேலும் உயர வைக்கும். அப்படிப்பட்ட விடாமுயற்சிக்கு வெற்றி நிச்சயம் என்பதை உரக்கச் சொல்கிற கதைகள் ஏராளம் உண்டு.
ஆனால் சில நேரங்களில் கடினம் முயற்சிகளுக்கு பலன் கிட்டுவதில்லை. போகுற போக்கில் நாம் செய்யும் செயல்கள் சில நேரங்களில் நமக்கே தெரியாமல் இரட்டிப்பு பலனை கொடுத்துவிடும். இதற்கு அதிர்ஷ்டம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
அப்படி தான் அதிர்ஷ்ட காராக மாறினார் இந்த ஜோமாட்டோ ஊழியர். உணவு டெலிவரி செய்ய போன இடத்தில் தனது காந்த குரலால் பாடலை முணுமுணுத்தார். இவரின் குரலை கேட்ட, கஸ்டமர் நன்றாக பாடுகிறாயே எங்கே ஒரு பாடல் பாடும் என கூற, தன்னுள் அடக்கி வைத்திருந்த திறமையை அங்கேயே வெளிக் காட்டினார அந்த ஊழியர். அவரின் குரலை நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்கள்.மெய் மறந்து போய்விடுவீர்கள்.
இவர் பாடியதை அப்படியே வீடியோ எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார் அந்த கஸ்டமர், அவ்வளவு தான் வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே வைரலானது. அவரின் குரலை நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதுமட்டுமில்லை அவருக்கு கூடிய விரைவில் சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிட்டும் என பலரும் வாழ்த்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.