இதுக்கு பெயர் தான் உலகமகா நடிப்பா? சவாரி செல்ல விரும்பாமல் செத்து செத்து நடிக்கும் குதிரை வீடியோ!

மனிதன் இயல்பு குதிரைக்கு எப்படி வந்தது என்பது தான் இங்கு ஆச்சரியம்

மனிதன் இயல்பு குதிரைக்கு எப்படி வந்தது என்பது தான் இங்கு ஆச்சரியம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
facebook viral video trending

facebook viral video trending

facebook viral video trending : சவாரி செல்ல விருப்பமில்லாமல் குதிரை ஒன்று சுற்றுலாவாசிகள் முன்பு மயங்கி விழுந்து ஏமாற்றுவது, செத்து செத்து நடிப்பது என பாசாங்கு காட்டும் வீடியோ இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

Advertisment

சுறுசுறுப்புக்கு அடையாளமாக பெரும்பாலும் குதிரை தான் கூறுவார்கள். விழுந்தாலும் குதிரை போல் விழ வேண்டும் என்ற பழமொழியும் ஒன்று. காரணம், குதிரை தான் விழுந்தாலும் சட்டென்று எழுந்துக் கொள்ளும். அதே போல் வாழ்வில் சோர்வை கண்டு விழுந்தாலும் குதிரை போல் உடனே எழு என்பதற்காக இந்த பழமொழியை பயன்படுத்துவார்கள்.

ஆனால், இங்கு குதிரை ஒன்று அப்படியே எதிர்மறையாக சோம்பேறியாக உலா வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை நடிப்பில் பிச்சி உதறுகிறது. மனிதன் இயல்பு குதிரைக்கு எப்படி வந்தது என்பது தான் இங்கு ஆச்சரியம். மனிதர்கள் தான் இதுப்போல் செய்வார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் இதுப்போன்ற காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம். இதே வித்தையை தான் இந்த குதிரையும் பயன்படுத்தி வருகிறது.

இந்த குதிரைக்கு சவாரி செய்வதில் சற்றும் விருப்பமில்லை. மனிதர்கள் தன் மீது அமர்ந்து சவாரி செல்வதும் துளியும் பிடிக்கவில்லை. மீறி அமர்ந்து சவாரி செய்தாலும், மயங்கி விழுவது போல கீழே விழுந்து, சவாரி செய்பவர்களையும் கீழே தள்ளிவிடுகிறது. இது அனைவரிடத்திலும் நகைச்சுவை கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

அதுமட்டுமில்லாமல், கீழே படுத்த நிலையில் இருக்கும் போது, யாரேனும் பக்கத்தில் வருகிறார்களா..? என லேசாக தலையை உயர்த்தி மட்டும் பார்க்கிறது. உச்சகட்டமாக, எழுந்திருப்பதைக் கண்டு ஒருவர் ஓடி வருவதைக் காணும் அந்தக் குதிரை மீண்டும் விட்டத்தைப் பார்த்தவாறு கீழே சரிந்து விழுகிறது. குதிரையின் இந்த உலகமகா நடிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: