மீன்களை சாப்பிடும் ஆடு.. ஆச்சரியமாக பார்க்கும் பொதுமக்கள்.வைரலாகும் வீடியோ!

ஆட்டின் உரிமையாளர் மீன் வியாபாரியாக இருப்பார் போல

ஆட்டின் உரிமையாளர் மீன் வியாபாரியாக இருப்பார் போல

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
facebook viral video

facebook viral video

facebook viral video : ஆடு சாப்பிடுபவர்கள் அசைவம் தான். ஆனால் ஆடு அசைவமா? சைவமா? என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பால், புல் தின்னும் ஆட்டை பார்த்து இருப்பீர்கள். இங்கே ஒரு ஆடு மீன்களை அப்படி ருசியாக ரசித்து சாப்பிடுகிறது. இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது.

Advertisment

மிருகங்கள் தங்களின் உணவு பழக்கத்தில் சற்று மனிதர்களை விட வித்தியாசமாக இருக்கும். வீட்டு பிராணிகள் சில நேரங்களில் நாம் உண்ணும் உணவையும் ருசி பார்க்கும். நாய், பூனை போன்றவை மனிதர்களை போலவே உணவு பழக்கம் கொண்டவையாக இருக்கும். ஆனால் இங்கு ஆடு சமைக்காத மீன்களை அப்படியே எடுத்து எடுத்து சாப்பிடுகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிகமாக இதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன. ஒருவேளை ஆட்டின் உரிமையாளர் மீன் வியாபாரியாக இருப்பார் போல.அவர் கொடுத்த பழக்கத்தினால் ஆடு மீன் சாப்பிட பழகி இருக்கும் என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: