மனதை உலுக்கும் புகைப்படம்! கேன்சரால் பரிதவிக்கும் தம்பிக்கு தூணாக நிற்கும் அன்பு அக்கா

எலும்பு மற்றும் ரத்தத்தில் வரும் புற்றுநோய் வகை.இதனால் பாதிக்கப்பட்ட தனது தம்பிக்கு தூண் போல் நிற்கும் சிறுமியின் புகைப்படம்

facebook viral
facebook viral

facebook viral : ‘புற்றுநோய்’… கேட்டவுடனேயே கதிகலங்கவைக்கும் வார்த்தை. அப்படியிருக்க, அதை அனுபவித்துக் கடப்பவர்கள் எத்தனை சிரமத்துக்குள்ளாவார்கள்? அதிலும் குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால்?! நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது இல்லையா? அத்தனை வலி நிரம்பிய ஒரு நோய்க்கும், கடினமான சிகிச்சைக்கும் ஒரு குழந்தை தள்ளப்படுவது வேதனையல்லவா?

நேற்றைய தினம், ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு உலகையே உலுக்கியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் கண்ணீர் விடுவது உறுதி. ஒரே தாய் வயிற்றில் பிறந்த இரண்டு குழந்தைகளில், ஒன்று மட்டும் அனுபவிக்கும் கொடுமை பெரிது என்றால், அதை கூடவே இருந்து பார்க்கும் மற்றொரு குழந்தை அதை விட பாவம். என்ன நோய்? எப்படி வந்தது? என்ற விளக்கம் எல்லாம் தெரியவில்லை. ஆனால் தனது தம்பிக்கு ஏதோ பிரச்சனை. அவனுக்கு உடல்நலம் சரியில்லை. ஏதோ கஷ்டப்படுகிறான். அவனை தனியாக விட்டு விட கூடாது அவன் கூடவே நாம் இருக்க வேண்டும். 4 வயதில் அந்த சிறுமிக்கு தெரிந்தது இது தான்.

லுகேமியா (Leukemia) – எலும்பு மற்றும் ரத்தத்தில் வரும் புற்றுநோய் வகை.இதனால் பாதிக்கப்பட்ட தனது தம்பிக்கு தூண் போல் நிற்கும் சிறுமியின் புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிகிச்சைக்காக அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த வகையான புற்றுநோய் பாதிக்கப்பட்டால் தொடர்ந்து ரத்த வாந்தி எடுப்பார்கள். பாதி நேரம் பாத்ரூமில் இருக்க வேண்டிய கொடுமை நிலை ஏற்படும். இந்த நிலைமையில் இருக்கும் தனது தம்பிக்கு ஆறுதலாக முழு நேரமும் மருத்துவமனையில் இருக்கிறாள் அந்த சிறுமி. நோய் தொற்று, குழந்தைகள் பார்க்கக்கூடாது என்பதையெல்லாம் தாண்டி, தனது அன்பு அக்காவின் பாசம் அவனுக்கு தேவை என்பதை உணர்ந்த அவர்களின் பெற்றோர்களும் இதற்கு சம்மதித்துள்ளனர்.

வளரும் பருவத்தில் இதை விட வேறு எதை நாம் பிள்ளைகளுக்கு கற்று தந்துவிட போகிறோம். சொந்த சகோதரன் சகோதரியிடம் அன்பு காட்டாதவர்கள் கட்டாயம் ஒருபோதும் மற்றவர்களிடம் அன்பு செய்ய மாட்டார்கள். இந்த புகைப்படம் வளர்ந்த, வளரும், அனைத்து தலைமுறையினருக்கும் சொல்லி விட்டு செல்லும் பாடம் மிகவும் ஆழமானது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Facebook viral viral facebook post

Next Story
பெருமைப்படும் தருணம்! நம்ம ஊரு ஆளு செஞ்ச வேலை மெக்சிக்கோ வரை கொட்டி கட்டி பறக்குதுsocial media viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express