New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/10/OjvNEL13apTNyZPt9e2U.jpg)
டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியினர் மேளதாளங்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியினர் மேளதாளங்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியினர் மேளதாளங்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 8 ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், பா.ஜ.க. 48 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம், பா.ஜ.க ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது. முன்பு ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்தது.
வாக்கு சதவீதத்தை பொருத்தவரையில் பா.ஜ.க 45.56% பெற்று, கடந்த தேர்தலை விட சராசரியாக 7 சதவீதம் அதிகமாக பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சுமார் 10 சதவீதம் இழந்து 2020 தேர்தலில் பெற்ற 53.57% வாக்குகளில் இருந்து 43.57% என்கிற அளவுக்கு சரிந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற 4.3% வாக்குகளில் இருந்து சுமால் 2% அதிகமாக 6.34% வாக்குகளை பெற்றுள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் காங்கிரஸ் தலைவர்கள் மேளதாளங்களுக்கு நடனம் ஆடுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் வீடியோவை பதிவிட்டுள்ள பயனாளர் ஒருவர், ‘டெல்லி தேர்தலில் எந்த இடங்களையும் வெற்றி பெறா விட்டாலும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது’ என பகிர்ந்துள்ளார்.
மற்றொரு பயனர், கடந்த தேர்தலை போல் இப்போதும் எந்த இடங்களையும் பெறாத காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
दिल्ली में 4.26% वोट वाली कांग्रेस का ‘भांगड़ा’ देख कर लगा, जैसे सियासी दफ्तर नहीं, ‘पागलखाने का वार्ड’ खुल गया हो!
— Radhika Khera (@Radhika_Khera) January 23, 2025
जिनकी राजनीति को जनता ने बार-बार नकारा,
वो अब अपनी हार पर ही जश्न मनाने में मस्त हैं!
कांग्रेस का नया नारा—‘हारो, नाचो, भूल जाओ!’ pic.twitter.com/BDjtWCJdLf
உண்மைச் சரிபார்ப்பு
இது தொடர்பாக நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் நடத்திய ஆய்வில் இந்த வீடியோ தேர்தல் முடிவுகள் வெளியான பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு முன்னரே சமூக வலைதளங்களில் உள்ளதாக கண்டறிந்துள்ளனர். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராதிகா கேரா ஜனவரி 24 ஆம் தேதி பகிர்ந்த பதிவுகளை மேற்குறிப்பிட்ட இரண்டு பயனாளர்களும் தற்போது பகிர்ந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளத
இதேபோல் ஜனவரி 23 ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பயனாளர் ஒருவர் இதே வீடியோவை பகிர்ந்து டெல்லி தேர்தலுக்கான பாடலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டதாக பகிர்ந்துள்ளார். நியூஸ்24 செய்தி நிறுவனம் ஜனவரி 23 ஆம் தேதி பதிந்த காணொளியில் டெல்லி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலுக்காக பாடலை வெளியில் விட்டு தலைவர்கள் உற்சாகமாக நடனமாடியதாக பகிர்ந்துள்ளது.
कांग्रेस ने ढोल नगाड़े के साथ दिल्ली विधानसभा चुनाव के लिए अपने "थीम सॉन्ग" को लॉन्च किया। pic.twitter.com/UF4pbzn6Fn
— Sandeep Khasa (@SamKhasa_) January 23, 2025
என்.டி.டி.வி செய்தி நிறுவனமும் ஜனவரி 23 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடனமாடும் செய்தியை பகிர்ந்து உள்ளதை கண்டறிந்துள்ளனர். இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகள் காங்கிரஸ் தலைவர்களான பவன் கேர் பிஹார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் செய்தி தொடர்பாளர் ராகினி நாயக் ஆகியோர் பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடனமாடியதாக தெரிவித்துள்ளார். அதே செய்தியில் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடனமாடுவது இதுவே முதல்முறை என்றும் குறிப்பிட்டுள்ளது.
दिल्ली कांग्रेस ने लॉन्च किया थीम सॉन्ग, जमकर थिरके नेता लोग @INCDelhi #Congress @NayakRagini pic.twitter.com/7bEC1fUfMw
— News24 (@news24tvchannel) January 23, 2025
மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நடனமாடுவதாக பகிரப்படும் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/did-congress-leaders-celebrate-after-delhi-election-defeat-743499
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.